

தேவகோட்டையில் பழமை வாய்ந்த செல்லப்பச்செட்டியார் பிள்ளையார் கோயில் உள்ளது.
கோயில் தென் புறத்தில் கோயில் காவலாளி காளிமுத்தன் வசித்து வருகிறார். நேற்று மாலையில் அவரது மனைவி செல்வி (50) வீட்டில் இருந்த தூணிலும் அருகில் உள்ள வேப்ப மரம் கிளையிலும் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் படுத்திருந்தார்.
அப்போது அவரது மகன் ராஜ்குமாரின் மகன் யுவன்ராஜ் (6) வெளியில் விளையாடி விட்டு வேகமாக வந்து பாட்டியின் மடியில் படுத்துள்ளான்.
பழமை வாய்ந்த கட்டிடத் தூண் என்பதால் பாரம் தாங்காமல் ஊஞ்சலில் விழுந்தது. படுகாயம் அடைந்த இருவரும் தேவகோட்டை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி யுவன்ராஜ் இறந்தான். செல்விக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மிகவும் ஆபத்தான நிலையில் சிவகங்கை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் இன்னும் அபாயக்கட்டத்தைத் தாண்டவில்லை.
ஊரடங்கு காலத்தில் வீட்டினுல் ஊஞ்சல் ஆடியபோது ஏற்பட்ட விபத்து ஊர்மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.