மது போதையில் படுத்திருந்தவர் மீது கல்லைப் போட்டுக் கொலை: போலீஸார் விசாரணை

சம்பவ இடத்தில் ஆய்வு செய்யும் போலீஸார்.
சம்பவ இடத்தில் ஆய்வு செய்யும் போலீஸார்.
Updated on
1 min read

புதுச்சேரி கன்னியகோவில் அருகே மது அருந்திவிட்டுப் படுத்திருந்த கடலூரைச் சேர்ந்தவரை இளைஞர் ஒருவர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்துள்ளார். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொலையாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் வன்னியர்பாளையம் பகுதியைச் சார்ந்தவர் டேனியல். இவர், நேற்று (மார்ச் 8) இரவு புதுச்சேரி கன்னியகோவில் பகுதியில் உள்ள மதுக்கடையில் மது அருந்திவிட்டு அங்குள்ள மண்ணாதீஸ்வரர் கோயில் அருகே படுத்துள்ளார். இன்று காலை (மார்ச் 9) அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இதையடுத்து, கிருமாம்பாக்கம் போலீஸாருக்கு இதுகுறித்து தகவல் வந்தது.

அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், "சிசிடிவி காட்சிகளில் கொலைக் காட்சிகள் பதிவாகியுள்ளன. இரவு சுமார் 12 மணியளவில் சம்பவம் நடந்த பகுதிக்கு ஒரு இளைஞர் வந்து படுத்திருந்த டேனியலை எழுப்புகின்றார். தொடர்ந்து டேனியல் எழுந்து நிற்கின்றார்.

அதன்பின்னர் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுகிறது. பின்னர் டேனியல் மீது இளைஞர் கல்லை எடுத்துத் தலையில் போட்டுக் கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து கொலை செய்த இளைஞர் சென்றுவிடுவது பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொலையாளியைத் தேடி வருகிறோம்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in