

மணப்பெண்ணை பார்க்கச் சென்றபோது தன்னை உடன் அழைத்துச் செல்லாததால் கல்யாண மாப்பிள்ளையை அவரது மைத்துனரே கொலை செய்த கொடூர சம்பவம் தென்காசியில் நடந்துள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தென்மலை இந்திரா காலனியைச் சேர்ந்தவர் முருகன் மகன் முனீஸ்வரன்.
இவருக்கு இன்று திருமணம் ஆகவிருந்த நிலையில் அதிகாலையில் கழுத்தறுபட்டுக் கிடந்தார். இந்தச் சம்பவம் திருமண வீட்டார் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இது குறித்து சிவகிரி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலையைச் செய்தது முனீஸ்வரனின் மைத்துனர் வீர சங்கிலிமுருகன் என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீஸ் தரப்பில், "நேற்றிரவு முனீஸ்வரன் மணப்பெண்ணைப் பார்க்கப்போவதாக சொல்லியிருக்கிறார். அப்போது அவரின் மைத்துனர் முனியப்பன் தன்னையுடன் உடன் அழைத்துச் செல்லுமாறு கூறியிருக்கிறார்.
குடித்துவிட்டு வரும் உன்னை எப்படி அழைத்துச் செல்ல முடியும் என்று கூறி அடித்துள்ளார். இதில் புதுமாப்பிள்ளைக்கும் அவரது மைத்துனருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, போதையில் இருந்த முனியப்பன், புதுமாப்பிள்ளையின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்" என்றார்.