Published : 21 Feb 2020 08:18 PM
Last Updated : 21 Feb 2020 08:18 PM

இந்தியன் -2 விபத்து வழக்கு: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றம்

இந்தியன் 2 வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார்.

'இந்தியன்- 2' படப்பிடிப்பு வேகவேகமாக நடந்து வருகிறது. இரவிலும் ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு மிகப்பெரிய கிரேனில் ஒளி உமிழும் விளக்குகளை பெரிய பிரேமில் இணைத்து உயரத்தில் தூக்கிப்பிடிக்கும்போது கிரேன் ஒருபுறமாகச் சரிந்து விழுந்தது. இதில் சிக்கிய 3 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்தனர்.

ஷங்கரின் உதவி இயக்குநராக பணிபுரிந்த அபிராமபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணா (34), மற்றும் ஊழியர்கள் ஆந்திராவைச் சேர்ந்த மது (29), சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சந்திரன் (58) ஆகியோர் உயிரிழந்தவர்கள் ஆவர்.

இந்த விபத்து குறித்து கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த குமார் (எ) பரத்குமார் என்பவர் “படப்பிடிப்பு தளத்தில் ‘லைகா’ நிறுவனம் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் கவனகுறைவாக இருந்ததாலும், அஜாக்கிரதையாக கிரேன் ஆபரேட்டர் செயல்பட்டதாலும் விபத்து நடந்ததாகவும் உரிய நடவடிக்கை வேண்டும்” எனப் புகார் அளித்ததன்பேரில் கிரேன் ஆபரேட்டர் ராஜன், லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர், ப்ரொடக்‌ஷன் மேனேஜர் உள்ளிட்டோர் மீது மீது ஐபிசி 287, 337, 338 304 (a) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து குறித்து பல தரப்பிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தொழிலாளர் பாதுகாப்பு குறித்து பெப்சி உள்ளிட்ட அமைப்புகள் புதிய முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்தன. இந்நிலையில் இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் பிரச்சினைகள் உள்ளதால் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x