நிர்மலாதேவி வழக்கு: 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு

நிர்மலாதேவி வழக்கு: 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு

Published on

கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலா தேவி உட்பட 3 பேர் இன்று ஆஜராகினர்.

வழக்கு விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு வழி நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு பேராசிரியர் நிர்மலா தேவி, முருகன் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்தனர்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் பேராசிரியர் நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து விலகிக் கொண்டார்.

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்காக பேராசிரியர் நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராயினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 26-ம் தேதி 3 பேரும் ஆஜராக உத்தரவிட்டு ஒத்திவைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in