சொத்தைப் பிரிப்பதில் தகராறு: மனைவி கொலை; கணவருக்கு ஆயுள்: ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு 

சொத்தைப் பிரிப்பதில் தகராறு: மனைவி கொலை; கணவருக்கு ஆயுள்: ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு 
Updated on
1 min read

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவருக்கு ராமநாதபுரம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ஏரக்காடு பகுதியைச் சேர்ந்த பிச்சை மகன் கோபால்(41). இவர் தனது தந்தை கூறியதன் பேரில் தனது குடும்ப பூர்வீக சொத்தை தனது சகோதரிகளுக்கும் பிரித்துக் கொடுக்க முயன்றுள்ளார்.

இதற்கு கோபாலின் மனைவி வனிதா(28), பூர்வீக சொத்தை கணவரின் சகோதரிகளுக்கு கொடுக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன், மனைவியருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 19.7.2013 அன்று வீட்டிலிருந்தபோது ஏற்பட்ட தகராறில் கோபால் மனைவி வனிதாவை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதுதொடர்பாக ராமேசுவரம் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கோபாலை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இவ்வழக்கில் இன்று கோபாலுக்கு ஆயுள்தண்டனையும், ரூ. 2,000 அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் 3 மாத காலம் சிறைத்தண்டனையும் விதித்து, மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி டி.பகவதியம்மாள் தீர்ப்பளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in