

தமிழகத்தில் 4 ஐஜிக்களுக்கு ஏடிஜிபிக்களாகவும், 8 டிஐஜிக்களுக்கு ஐஜிக்களாகவும், 7 எஸ்.பி.க்களுக்கு டிஐஜிக்களாகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 டிஜிபிக்கள், 3 ஏடிஜிபிக்கள், 9 ஐஜிக்கள், 14 டிஐஜிக்களுக்குப் பதவி உயர்வும், 14 மூத்த எஸ்.பி.க்களுக்கு டிஐஜி அந்தஸ்தும் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து கடிதம் எழுதியிருந்தது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக மூன்று ஐஜிக்களுக்கு ஏடிஜிபிக்களாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர 7 எஸ்.பி.க்கள், துணை ஆணையர்களுக்கு டிஐஜி அந்தஸ்து அளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.
1. மதுரை காவல் ஆணையராகப் பதவி வகிக்கும் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஏடிஜிபியாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.(1995-ம் ஆண்டு பேட்ச் )
2. சென்னை காவலர் நலன் ஐஜியாகப் பதவி வகிக்கும் சேஷசாயி ஏடிஜிபியாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.(1995-ம் ஆண்டு பேட்ச்)
3. அயல் பணியில் இருக்கும் ஐஜி பாலநாகதேவி ஏடிஜிபியாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். (1995-ம் ஆண்டு பேட்ச்)
4. அயல் பணியில் இருக்கும் ஐஜி சந்தீப் மிட்டல் ஏடிஜிபியாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.(1995-ம் ஆண்டு பேட்ச் )
இதேபோன்று 2002-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகளான 8 டிஐஜிக்களுக்கு ஐஜிக்களாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
1. ஜெ.லோகநாதன் (திருச்சி சரக டிஐஜி)
2. கபில்குமார்.சி.சரத்கர் (சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர்)
3. என்.கண்ணன் (உள் பாதுகாப்புப் பிரிவு)
4. சந்தோஷ்குமார் (விழுப்புரம் சரக டிஐஜி)
5. பி.சி.தேன்மொழி (காஞ்சிபுரம் சரக டிஐஜி)
6. ஜி.கார்த்திகேயன் (கோவை சரக டிஐஜி)
7 .ஜோஷி நிர்மல்குமார் (திண்டுக்கல் சரக டிஐஜி)
8. கே.பவானீஸ்வரி (டிஐஜி, கடலோரப் பாதுகாப்புக் குழுமம்)
இதேபோன்று 2007-08-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகளான மூத்த எஸ்.பி.க்கள் 7 பேருக்கு டிஐஜி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.
1. சரவணன் (உளவுப் பிரிவு டிஜிபி அலுவலகம். சென்னை)
2. சேவியர் தன்ராஜ் (அயல் பணி)
3. அனில் குமார் கிரி (அயல் பணி)
4. ப்ரவேஷ்குமார் (வேலூர் எஸ்.பி.)
5. எஸ்.பிரபாகரன் ( திருச்சி தலைமையிடத் துணை ஆணையர்)
6. கயல்விழி (திருப்பூர் எஸ்.பி.)
7. ஆர்.சின்னசாமி (எஸ்.பி.கடலோரப் பாதுகாப்புக் குழுமம் நாகை)
இவ்வாறு மேற்கண்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.