

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த ஜெய்ஷா என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாப்பூரை சேர்ந்த ஜெய்ஷா(22) என்பவர் வெஸ்ட் இண்டீசில் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி தொடர்பாக சென்னையில் மேட்ச் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வேப்பேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் வேப்பேரி போலீசார் , சூளை ஹைரோட்டில் உள்ள ஒரு கடையின் மேல் மாடியில் ஆன்லைனில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த சவுகார்பேட்டையை சேர்ந்த ராகுல் டி.ஜெயின் ( 24), தினேஷ் குமார் ( 29) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம்இருந்து ரூ. 53 லட்சம் பணம், லேப்டாப்கள், செல்போன்கள், பணம் எண்ணும் எந்திரம் பறிமுதல் செய்தனர்.
போலீசார் சோதனையின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நபரான மயிலாப்பூர் ஜெய்ஷா தப்பிவிட்டார்.
08.02.2020-ம் தேதி இரவு 22.30 மணிக்கு உதவி ஆணையாளர் வேப்பேரி, தனிப்படையினர் எஸ்.ஐ. சசிராஜன் மற்றும் பூபதி ஆகியோர் ஜெய்ஷாவைக் கைது செய்து விசாரணை முடித்து இன்று 09.02.2020-ம் தேதி காலை 10.00 மணிக்கு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த அழைத்து சென்றனர்.
கடந்த 4 மாதங்களகாக தலைமறைவாக இருந்த ஜெய்ஷாவை வேப்பேரி தனிப்படை போலீசார் நேற்றிரவு கைது செய்து அவரிடம் சூதாட்டத்தில் யார்? யாருக்கெல்லாம் தொடர்புள்ளது ?என விசாரணை நடத்தி வருகின்றனர்.