சிறைக்குச் சென்ற பெண் மீண்டும் பணி நியமனம்: சர்ச்சையில் சிக்கிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை 

சிறைக்குச் சென்ற பெண் மீண்டும் பணி நியமனம்: சர்ச்சையில் சிக்கிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை 
Updated on
1 min read

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினக்கூலிப் பணியாளராக கவுரி என்பவர் பணிபுரிந்து வந்தார்.

இவர், கடந்த ஆண்டு ஒரு வழக்கில் சிறைக்கு சென்றார். ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பணியில் சேர்ந்துள்ளார்.

ஒரு வழக்கில் கைதானால் அரசு ஊழியராக அல்லது அரசு துறைகளில் ஒப்பந்த தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்தாலும் எந்த ஒருவழக்கில் அவர்கள் கைதானாலும் உடனடியாக அவர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டும்.

ஆனால், கவுரி கைதாகி மீண்டும் சத்தமில்லாமல் வந்து வழக்கம்போல் ஒப்பந்தப் பணியாளராக பணியைத் தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அரசு மருத்துவமனை ஊழியர்கள் முதல்வர் தனிப்பிரிவில் புகார் செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ‘டீன்’ சங்கமணி விசாரணை நடத்தினார்.

டீன் சங்குமணி கூறுகையில், ‘‘கவுரி ஒரு தினக்கூலி பணியாளர். அவர் எங்கள் கட்டுப்பாட்டில் வருகிற ஊழியர் கிடையாது. மேலும், அவர் ஒரு தினக்கூலிப்பணியாளர் என்பதால் அவர் கைதான விவகாரத்தை போலீஸார் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரவில்லை.

மேலும், அந்த ஊழியர், அவரது குடும்ப ப்பிரச்சனை வழக்கில் கைதாகி சிறை சென்றவர். வேற எந்த ஒரு குற்றப்பின்னணி வழக்கும் அவர் மீது கிடையாது. தினக்கூலிப்பணியாளர்கள் திடீரென்று பணிக்கு வருவார்கள், செல்வார்கள். தற்போது அவர் பணிக்கு வரவில்லை, ’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in