

திமுக எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணனை விமர்சித்து திருச்செந்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் கோட்டைத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நேற்றிரவு அனிதா ராதாகிருஷ்ணனை விமர்சித்து மீம் உருவாக்கி பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து அனிதா ராதாகிருஷணின் ஆதரவாளர்கள் மணிகண்டனின் வீட்டிற்குச் சென்று மணிகண்டனையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மணிகண்டன் அதிகாலையில் தனது பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அனிதா ராதாகிருஷ்ணன் குறித்து மிகக் காடமாக, தரக்குறைவான வார்த்தைகளால் பேசியுள்ளார்.
இந்த வீடியோ வைரலாக திருச்செந்தூர், தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.
மணிகண்டன் கஞ்சா போதையில், அனிதா ராதாகிருஷ்ணன் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு ஒளிப்பதிவு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை அவர் மீது யாரும் எவ்வித புகாரும் தெரிவிக்காததால் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில், இளைஞர் மணிகண்டன் வீட்டிலிருந்து தலைமறைவானதாகத் தெரிகிறது.