

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டிலிருந்து மாயமான பள்ளிச் சிறுமி ஒருவர் முட்புதரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து சிவகாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரிக்கின்றனர்.
சிவகாசி தாலுகாவிற்கு உட்பட்டது கொங்களாபுரம். இதே பகுதியில் பெயின்டர் வேலை செய்து வருபவரின் மகள் ராதிகா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) .
இச்சிறுமி அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி முடிந்து நேற்று மாலை வீடு திரும்பிய பின் இயற்கை உபாதைகளைக் கழித்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை.
சிறுமியை நீண்ட நேரம் தேடிய பெற்றோர், உறவினர்கள் மாரனேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று காலையில் முட்புதர்களுக்கு இடையே மாணவி ஆடைகள் கிழிக்கப்பட்டு இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
தகவலறிந்து வந்த சிவகாசி காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.