

உசிலம்பட்டி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரின் மனைவி, மகளை கத்தியால் குத்திய இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகிலுள்ள கொக்குடையான்பட்டியைச் சேர்ந்தவர் முனிப்பாண்டி(50). தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார்.
இவரது வீட்டுக்கு அருகில் 3 நாளுக்கு முன், 17 வயது இளைஞர் ஒருவர் மது அருந்தினார். இதை முனிப்பாண்டி தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அந்த இளைஞர் இன்று காலை முனிப்பாண்டி வீட்டுக்கு கத்தியுடன் அவரை தேடிச் சென்றுள்ளார்.
அங்கிருந்த அவரது மனைவி கலாவிடம் முனிப்பாண்டியை பற்றி கேட்டுள்ளார். இது தொடர்பாக கலாவுக்கும், இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது, கலா மற்றும் அவரது மகள் ஆனந்த சுவேதா ஆகியோரை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். காயமடைந்த இருவரும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.
இது குறித்த புகாரின்பேரில் உசிலம்பட்டி நகர் போலீஸார் தாய், மகளை குத்திய இளை ஞரை கைது செய்தனர்.