Published : 18 Jan 2020 07:35 PM
Last Updated : 18 Jan 2020 07:35 PM

குடியரசு தின விழா ஒத்திகை; 4 நாட்களுக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

குடியரசு தின விழாவை ஒட்டி சென்னை கடற்கரையில் நடைபெறும் விழா மற்றும் வாகன அணிவகுப்பு ஒத்திகைக்காகவும், குடியரசு தினத்துக்காகவும் சென்னை கடற்கரைச் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை செய்திகுறிப்பு:

“குடியரசு தின விழா 26-ம் தேதி சென்னை கடற்கரைச் சாலையில் வாகன அணிவகுப்புடன் நடைபெறவிருப்பதால். அதற்கான ஒத்திகை வரும் 20, 22, 23 மற்றும் குயரசு தின விழா நாளான 26-ம் தேதி ஆகிய 4 நாட்களுக்கு காமராஜர் சாலையில் சாந்தோம் சர்ச் முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

அதற்கான போக்குவரத்து மாற்றம் கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1. அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கிச் செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம் சாலை, வி.கே.ஐயர் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் சந்திப்பு, லஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை, நீல்கிரீஸ் சந்திப்பு, மியூசிக் அகாடமி, ராயப்பேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

2. அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கிச் செல்லும் பிற வாகனங்கள் (மாநகரப் பேருந்துகள் உட்பட) சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலை சந்திப்பில், கச்சேரி சாலை நோக்கித் திருப்பப்படும். அவை கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை நீல்கிரீஸ் சந்திப்பு, மியூசிக் அகாடமி சந்திப்பு, ராயப்பேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

3. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கிச் செல்லும் மாநகரப் பேருந்து தடம் எண், 27-D ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் வி.எம். தெரு சந்திப்பில் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு, அவை வி.எம்.தெரு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, மந்தைவெளி சந்திப்பு, தெற்கு கெனால் பேங்க் ரோடு, சீனிவாசபுரம் வழியாக பட்டினம்பாக்கம் சென்றடையலாம்.

4. அதே போன்று மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகர பேருந்து வழித்தடம் எண், 21 G ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மேம்பாலம் நோக்கித் திருப்பி விடப்பட்டு, அவை ராயப்பேட்டை மேம்பாலம், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

5. அதே போன்று மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக அண்ணா சதுக்கம் நோக்கி வரும் மாநகரப் பேருந்து வழித்தடம் 45-B மற்றும் 12-G ஆகியவை நீல்கிரீஸ் சந்திப்பு, மியூசிக் அகடமி சந்திப்பு, ராயப்பேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஸ்மித் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை கெனால் சாலை சந்திப்பு வரை அனுமதிக்கப்படும்.

6. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் நடேசன் சாலை சந்திப்பில் டாக்டர் நடேசன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

7. டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் அவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும்.

8) டாக்டர் பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கித் திருப்பி விடப்படும்.

9. பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கித் திருப்பி விடப்படும்.

10. வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் (மாநகரப் பேருந்து தவிர்த்து) பெல்ஸ் ரோடு வழியாகத் திருப்பி விடப்படும். மாநகரப் பேருந்துகள் கெனால் சாலை சந்திப்பு வரை அனுமதிக்கப்படும்,

11. அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக வாலாஜா சாலை விருந்தினர் மாளிகை அருகில் மாற்றப்படும்.

12. பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை முன்பாகத் திருப்பி விடப்பட்டு ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக வாலாஜா பாயிண்ட், அண்ணா சாலை, அண்ணா சிலை, அண்ணா சாலை அமெரிக்கத் தூதரகம் சர்வீஸ் ரோடு, கதீட்ரல் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, காரணீஸ்வரர் பகோடா தெரு சாந்தோம் சாலை வழியாக அடையாறு சென்றடையலாம்.

13 . வாலாஜா பாயிண்ட் மற்றும் அண்ணா சாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் வர அனுமதியில்லை.

போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்துக் காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்”.

இவ்வாறு சென்னை போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x