தஞ்சையில் மது போதையில் ஏற்பட்ட தகராறு: இருவர் கொலை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

தஞ்சாவூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் இருவர் கொலை செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியில் உள்ள மதுபானக்கடை அருகே நேற்று இரவு (ஜன.15) இளைஞர்கள் சிலர் மது அருந்திக் கொண்டிருந்தபோது இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், அரிவாளால் வெட்டப்பட்டதில் வடக்கு வாசல் காளியம்மன் கோயில் காலனியைச் சேர்ந்த சக்திவேல் (36) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில், வடக்கு வாசல் இரட்டை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த செபாஸ்டியன் (26) என்பவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அவர் அங்கிருந்தவர்களால் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த செபாஸ்டியன் இன்று (ஜன.16) காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், அச்சம்பவத்தில் காயமடைந்த விளார் சாலை தில்லை நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (26) தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக வடக்கு வாசல் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், வெங்கடேசன், சூர்யா உள்பட 4 பேரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in