

சென்னையில் குழந்தைகள் ஆபாச படம் அனுப்பியது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையை சேர்ந்தவர் சுமித் குமார் கல்ரா இவர் குழந்தைகள்ஆபாச பட இணைப்பை மற்றொருவருக்கு அனுப்பியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அவரை, விமான நிலையத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவரை வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக சென்னை காவல்துறை அனுப்பிய செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விஸ்வநாதன் உத்திரவின்படி. இணையதளம் மு்லம் சிறுவர். சிறுமியர் தொடர்பான ஆபாசப் படங்களை பார்த்தல். பகிர்தல். பதிவேற்றம் செய்தல், பதிவிறக்கம் செய்தல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது, இதனை கண்காணிக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையாளர் ஜெயலட்சுமி அவர்கள் தலைமையில். இப்பிரிவின் 4 கூடுதல் காவல் துணை ஆணையாளர்களை கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில். காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையத்தில் இருந்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களுக்கு கிடைக்கப் பெற்ற தகவல்கள் காவல் துணை ஆணையாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு அவர்களால் பெறப்பட்டு. கணிணி வழி குற்ற புலனாய்வு பிரிவின் மூலம் ஆய்வு செய்ததில். கடந்த 29-04-2019 அன்ரு 9884073701 என்ற எண்ணிலிருந்து பயன்படுத்தப்பட்ட முகநூல் பக்கத்தின் உரிமையாளர் சுமித்குமார் கல்ரா என்பவர் இணையதளத்தில் தடை செய்யப்பட்ட சிறுவர் மற்றும் சிறுமியரின் ஆபாசப்படங்களை தீய மற்றும் பாலியல் எண்ணங்களோடு பதிவிறக்கம் செய்து தான் பார்த்து. அதனை வேறு முகநூல் முகவரிக்கு பகிர்ந்துள்ளார்,
இவர் சென்னை. எழும்பூர். மாண்டியத் சாலையில் உடற்பயிற்சி சாதன மொத்த வியாபாரம் செய்து வருகிறார், இவரின் இந்த செயலானது சமூக நல் ஒழுக்கத்தை சீரழிக்கும் செயல் என்பதால். கணிணி வழி குற்ற புலனாய்வு பிரிவு அளித்த தகவலின் அடிப்படையில். வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலைய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வந்தது,
இந் நிலையில். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விசுவநாதன் உத்திரவின்படி ஜெயலட்சுமி என்கிற காவல் துணை ஆணையாளரின் தலைமையிலான தனிப்படையினர் சுமித்குமார் கல்ராவை நேற்று (11,01,2020) கைது செய்து. அவர் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய செல்போன் கைப்பற்றப்பட்டது,
விசாரணைக்குப் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு. நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வாறு போலீஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.