காவல்துறை சார்பு ஆய்வாளர் தேர்வுத் தேதி மாற்றம்: சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

காவல்துறை சார்பு ஆய்வாளர் தேர்வுத் தேதி மாற்றம்: சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
Updated on
1 min read

வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள காவல்துறை சார்பு ஆய்வாளர் தேர்வுத் தேதி தள்ளி வைக்கப்பட்டு புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அளித்துள்ள செய்திக்குறிப்பு:

“2019-ம் ஆண்டுக்கான சார்பு ஆய்வாளர் தேர்வில் காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழகத்திலுள்ள 32 தேர்வு மையங்களில் 11- 01- 2020 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இத்தேர்வு 13-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு மையத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த விண்ணப்பதாரர்கள் தவிர்த்து பிற விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் இக்குழும இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துள்ள தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்தில், குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

சென்னை, கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு மையத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் இக்குழும இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துள்ள தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் டாக்டர் எம்,ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், பெரியார் ஈ,வெ,ரா நெடுஞ்சாலை, மதுரவாயல், சென்னை 95 தேர்வு மையத்தில் 13-01-2020 அன்று நடைபெறும் எழுத்துத் தேர்வில் கலந்துகொள்ளலாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.

இவ்வாறு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in