

சென்னையில் 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னையில் முக்கியப் பொறுப்பில் உள்ள மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறைச் செயலர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார் .
மாற்றப்பட்டவர்கள் முன்பு வகித்த பதவியுடன்:
1. சென்னை காவல் ஆணையரகத் தலைமையிடத் துணை ஆணையர் அசோக்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை போக்குவரத்து காவல் துணை ஆணையராக (மேற்கு) நியமிக்கப்பட்டுள்ளார்.
2. சென்னை போக்குவரத்து காவல் துணை ஆணையர் (மேற்கு) லட்சுமி மாற்றப்பட்டு வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு சென்னை எஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. வணிகக் குற்றப்புலனாய்வு பிரிவு சென்னை, எஸ்பி விமலா மாற்றப்பட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலக தலைமையிடத் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கண்ட மாற்றம் உள்துறைச் செயலர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.