

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டு ஒருவர் தற்கொலை முயற்சி செய்ததால், அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
கோவை மாவட்டம் காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் இன்று (டிச.17) காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றித் திரிந்தார். அதன் பின் திடீரென தன்னிடம் உள்ள தூக்க மாத்திரைகளை எடுத்துச் சாப்பிட்டு விட்டு, தனது வீட்டை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகப் புகார் தெரிவித்தார். அப்போது அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவருக்கு முதலுதவி அளித்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.