

அருப்புக்கோட்டையில் தடைசெய்யப்பட்ட ஆன் லைன் லாட்டரி விற்பணை செய்த மூன்று நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
விழுப்புரத்தில் தடைசெய்யப்பட்ட மூன்று நம்பர் ஆன்லைன் லாட்டரி மோகத்தால் கடனாளியான நகைத் தொழிலாளி அருண் தன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தடைசெய்யப்பட்ட ஆன் லைன் லாட்டரி விற்பனை செய்பவர்களை காவல்துறையினர் தேடிப்பிடித்து கைது செய்து வருகின்றனர்
இந்நிலையில் அருப்புக்கோட்டையில் தடைசெய்யப்பட்ட ஆன் லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததது.
தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் ஆன்லைன்லாட்டரி விற்பனை செய்ததாக வேல்முருகன் காலணியை சேர்ந்த சக்திவேல் மற்றும் நாகலிங்க நகரை சேர்ந்த சிவசங்கரன், கருப்பசாமி நெசவாளர் நகரை சேர்ந்த ஆகிய மூவரை கைது செய்தனர்,
விசாரணையில் மூவரும் மொபைல் போன் மூலம் கேரள மாநில லாட்டரிகளை ஆன்லைனில் விற்பணை செய்தது தெரியவந்தது
வழக்கு பதிவு செய்த அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் மூவரையும் கைது செய்தனர்
கைது செய்யபப்பட்டவர்களிடம் இருந்து மொபைல்போனையும் ரூ1 லட்சம் ரொக்கப்பணத்தையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.