

சென்னை தாம்பரம் அருகே கட்டிட மேஸ்திரியை கடத்தி கொலை செய்த சென்னை பள்ளிகரணை பகுதியைச் சேர்ந்த 10 பேரை வாழைப்பந்தல் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த தட்டச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (50). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி தேவகி, மகன் கிருஷ்ணன். சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டிட கூலி வேலைக்காக தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதிக்கு குடியேறினர்.
கடந்த ஒரு மாதமாக வேலைக் குச் செல்லாமல் தினமும் மதுக் கடைக்குச் சென்று ரூ.2,000 நோட் டுகளாக முருகன் செலவழித்துள் ளார். இதனால் சந்தேகமடைந்த, மதுக்கடையில் பணிபுரியும் முனியாண்டி என்பவர் பணம் குறித்து முருகனிடம் கேட்டபோது ‘பை நிறைய கோடிகளில் பணம் கிடைத்ததால் செலவு செய்கிறேன்’ என முருகன் மது போதையில் கூறியுள்ளார். இதை நம்பிய முனி யாண்டி இந்த தகவலை அதே பகுதியைச் சேர்ந்த அருண் உள்ளிட்ட சிலரிடம் கூறியுள்ளார். அந்தப் பணத்தை கைப்பற்ற நினைத்த அருண் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த மாதம் 24-ம் தேதி முருகன், இவரது மனைவி தேவகி, மகன் கிருஷ்ணனை கடத்திச் சென்று பள்ளிக் கரணை ஏரிக்கரை அருகேயுள்ள கிடங்கில் அடைத்து வைத்து மூவரையும் தாக்கியுள்ளனர். இதில், முருகன் உயிரிழந்தார்.
இதையடுத்து முருகனின் உடலை காரில் ஏற்றி உடன் தேவகி, கிருஷ்ணன் ஆகியோரை கடந்த 25-ம் தேதி அழைத்து வந்து தட்டச்சேரி கிராமத்தில் விட்டுச் சென்றுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த தாயும் மகனும் சேர்ந்து முருகனுக்கு இறுதிச் சடங்குகளை செய்ய ஏற்பாடு செய்தனர்.
முருகனின் உயிரிழப்பில் சந்தே கம் இருப்பதாக உறவினர்கள் அளித்த தகவலின்பேரில் வாழைப் பந்தல் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விசாரணையில் பணம் கேட்டு மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
காவல் துறையினர் நடத்திய தொடர் விசாரணையில் முருகன் கொலை வழக்கு தொடர்பாக முடிச்சூர் மற்றும் பள்ளிக்கரணை பகுதிகளைச் சேர்ந்த அருண் பாண் டியன், எழில் குமார், சேகர், முனி யாண்டி, விக்னேஷ், கந்தன், ஜான கிராமன், குமார், புருஷோத்தமன், பாரதி ஆகிய 10 பேரை நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முருகனிடம் இருந்த பணம் குறித்து தேவகி மற்றும் கிருஷ்ணன் ஆகியோரி டம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட வர்களில் அருண்பாண்டியன் என்ப வர் உதவி காவல் ஆய்வாளர் ஒரு வரின் மகன் என்று தெரிவித்தனர்.