

ஓசூர் மூக்கொண்டப்பள்ளி கிராமத் தைச் சேர்ந்தவர் முரளிக்குமார். இவருக்கும் நவுதி கிராமத்தைச் சேர்ந்த ஸ்வேதா (22) என்ற பெண்ணுக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது . இவர்களுக்கு 11 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் ஓசூர் ரயில் நிலை யம் அருகே தண்டவாளத்தில் ஸ்வேதா தலை துண்டான நிலை யில் இறந்து கிடந்தார். அச்சமயத் தில் ஓசூர் வழியாக மைசூர் செல் லும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர், தண்டவாளத்தில் பெண் உடல் கிடப்பதை பார்த்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். ரயில்வே போலீஸார், ஸ்வேதாவின் உடலை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தின் அருகே படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் குழந்தைக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.