

மதுரை
மதுரையில் பிறந்தநாள் விழாவை நண்பர்களுடன் கொண்டாடிவிட்டு காரில் வீட்டுக்குச் செல்லும்போது நேர்ந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் பலியாகினர்.
அரசு பாஸ்சும் இளைஞர்கள் சென்ற காரும் நேருக்கு நேர் மோதிய வியத்தில் காரில் சென்ற 3 பேரும் உடல் நசுங்கி பலியாகினர். மூவருமே புகைப்பட கலைஞர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.
பிறந்தநாளன்றே இளைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது
மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) பிறந்த நாள். அதனால், மதுரை காளவாசல் மற்றும் பொன்மேனி பகுதிகளைச் சேர்ந்த தனது நண்பர்கள் குணா, பிரசன்னா ஆகியோருடன் சேர்ந்து பிறந்தநாள் விழாவை மகிழ்ச்சியாகக் கொண்டாடியுள்ளார்.
பின்னர் தினேஷை திருமங்கலத்தில் உள்ள அவர் வீட்டிற்கு இரவு காரில் நண்பர்கள் அழைத்து செல்லும் வழியில் ஆஸ்டின்பட்டி பைபாஸ் சாலையில் எதிரே அதிவேகமாக வந்த அரசு விரைவுப் பேருந்து கார் மீது நேருக்கு மேதியது. இதனால் கார் உருகுலைந்துபோனது. சம்பவ இடத்திலேயே கார் உள்ளேயே நசிங்கி முன்று இளைஞர்களும் பலியானார்கள்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிறந்தநாள் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது சம்பவம் பலியான மூன்று இளைஞர்களின் குடும்பத்தினர், உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விபத்து குறித்து பொதுமக்கள் சிலர் கூறும்போது, "அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்கள் இரவு நேரங்களில் அதிவேகமாக பயணிக்கின்றன. மேலும் அவை ரிங் ரோட்டில் வரமால் நகருக்குள் வருவதாலேயே அடிக்கடி இவ்வாறான விபத்துக்கள் நடக்கின்றன. இதனால் இறப்பு எண்ணிக்கை அண்மைக்காலமாகவே அதிகரித்து வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அதிவேகமாக வரும் விரைவுப் பேருந்துகளை நகருக்குள் அனுமதிக்காமல் தடை விதிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்