

கோவை
கோவையில், பள்ளி மாணவிகளி டம் ஆபாச படம் காட்டியதாக கைதான பள்ளி தாளாளர் சிறை யில் அடைக்கப்பட்டார்.
கோவை காந்திபுரம் விரிவாக் கப் பகுதி 5-வது வீதியில் புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி. உள்ளது. இப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளியின் தாளாளராக, புலியகுளத்தை சேர்ந்த மரிய ஆண்டனிராஜ் (55) பணியாற்றி வந்தார். இவர் மதபோதகராகவும் உள்ளார். இவர், பள்ளியில் படிக்கும் குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த 5 மாணவிகளிடம், சில தினங்களுக்கு முன்னர் செல்போனில் ஆபாச படத்தை காட்டியுள்ளார். இது குறித்து, அந்த மாணவிகள் தெரிவித்ததன் அடிப்படையில், அவர்களது பெற்றோர் நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்து மரிய ஆண்டனிராஜிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், இச்சம்பவம் தொடர் பாக, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மத்தியப்பகுதி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர், போக்சோ பிரிவின்கீழ் வழக் குப் பதிந்து தாளாளர் மரிய ஆண்டனிராஜை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர், விசாரணைக்கு பின்னர் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக் கப்பட்டார். மேலும், மரிய ஆண்டனி ராஜ், இதேபோல் வேறு ஏதாவது மாணவிகளிடம் செல்போனில் ஆபாச படத்தை காட்டியுள்ளாரா, பாலியல் தொந்தரவுகள் அளித் துள்ளாரா என்பது குறித்தும் போலீ ஸார் விசாரணை நடத்தினர்.
இது குறித்து காவல்துறையினர் கூறும்போது, ‘‘மரிய ஆண்டனி ராஜ், திட்டமிட்டு செல்போனை சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் கொடுத்து செயலி விவகாரம் குறித்து கேட்டுள்ளார். அப்போது, இவர் முன்னரே செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளதால், அந்த ஆபாச படம் குறித்த லிங்க்கு கள் செல்போனில் தெரிந்துள்ளன. அதை மாணவிகள் பார்க்கும் வகை யில் ஏற்பாடு செய்துள்ளார். இதை பார்த்து, மாணவிகள் சலனப்பட் டால் அவர்களுக்கு பாலியல் தொல் லையும் அளிக்க திட்டமிட்டுள் ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது’’ என்றனர்.