Published : 15 Nov 2019 01:08 PM
Last Updated : 15 Nov 2019 01:08 PM
கோவையில் ரூ.72.5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கோவை சரவணம்பட்டி போலீஸார் நேற்று (நவ.14) இரவு, தங்கள் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மினி வேனில் வந்த செல்வபுரத்தைச் சேர்ந்த ஷேஸ்தாராம் (50), மோப்பிரிபாளையத்தைச் சேர்ந்த மோதிலால் (38) ஆகியோரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
அதில், கருமத்தம்பட்டி அருகேயுள்ள மோப்பிரிபாளையத்தில் உள்ள குடோனில் இருந்து புகையிலைப் பொருட்களை எடுத்து வந்ததாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து சரவணம்பட்டி போலீஸார், மோப்பிரிபாளையத்தில் உள்ள குடோனில் தற்போது சோதனை நடத்தினர். இதில் குடோனில் இருந்து தடை விதிக்கப்பட்ட 70 பெட்டி'ஹான்ஸ்', 11 பெட்டி 'விமல்', 33 பெட்டி 'கணேஷ்', 21 பெட்டி 'கூல் லிப்' ஆகிய புகையிலைப் பொருட்களாஇ போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.72.5 லட்சம் ஆகும். இவர்கள் கோவை , பொள்ளாச்சி , திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு விற்று வந்தது தெரிந்தது. இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.