குரூப் 2 தேர்வு தோல்வியால் விரக்தி: தேனி வனவர் கல்லூரியில் பயிற்சியில் இருந்த இளைஞர் தற்கொலை

குரூப் 2 தேர்வு தோல்வியால் விரக்தி: தேனி வனவர் கல்லூரியில் பயிற்சியில் இருந்த இளைஞர் தற்கொலை
Updated on
1 min read

ஆண்டிபட்டி

குரூப் 2 தேர்வு தோல்வியால் விரக்தியடைந்த மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தேனியில் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில், வனவியல் பயிற்சி கல்லூரி செயல்படுகிறது.

தமிழகம் முழுவதும் வனத்துறை சீருடை பணியாளர்கள் மூலம் தேர்வாகும் வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தற்போது இங்கு 250-க்கும் மேற்பட்ட வனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மதுரை பொன்னரகத்தைச் சேர்ந்த காசிலங்கம் என்பவரின் மகன் விஜய நாராயணனனும், வனவர் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

இவர் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில், தேர்வின் முடிவில் இவர் தேர்ச்சி பெறவில்லை.

அதேநேரம் இவருடன் தங்கி பயிற்சி பெற்றிருந்த நண்பர்கள் சிலர் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் மனவிரக்தி அடைந்த விஜயநாராயணன் கல்லூரி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வனவியல் பயிற்சி கல்லூரி நிர்வாகம் சார்பில் வைகை அணை போலீஸாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீஸார் இறந்த விஜய நாராயணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வைகை அணை போலீசார் வழக்-குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in