க்ரைம்
நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவர் இர்பான் தந்தைக்கு அக்.25 வரை காவல்
தேனி
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் இர்பானின் தந்தைக்கு அக்டோபர் 25 வரை காவலை நீட்டித்து தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பான் மற்றும் அவரின் தந்தை முகம்மது சபி.
நீட் ஆள்மாறாட்டம் குறித்த சிபிசிஐடி விசாரணையின்போதுதான் முகமது சபி போலி மருத்துவர் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், முகம்மது சபியின் நீதிமன்ற காவல் முடிந்ததையடுத்து தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவர் இன்று (புதன்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், முகமது சபியின் நீதிமன்ற காவலை நீட்டித்து மீண்டும் 25-ம் தேதி ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார்.
