திருப்பத்தூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த கணவர் கைது: மாடு முட்டி உயிரிழந்ததாக நாடகமாடியது அம்பலம்

திருப்பத்தூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த கணவர் கைது: மாடு முட்டி உயிரிழந்ததாக நாடகமாடியது அம்பலம்
Updated on
1 min read

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கிணற்றில் தள்ளி கொலை செய்த கணவரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் அடுத்த ஜமனாமரத்தூர் ரங்க சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி குமரேசன் (30). இவரது மனைவி நதியா (25). இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், குமரேசனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவுக்கார பெண் ணுடன் குமரேசனுக்கு கூடா நட்பு ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த நதியா தனது கணவரை கண்டித்துள்ளார். இது தொடர்பாக தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த மாதம் தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் நதியாவை, குமரேசன் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த நதியா திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் உறவுக்கார பெண் வீட்டில் இருந்த குமரேசனை, நதியா கண்டித் துள்ளார். பின்னர் கணவரிடம் கோபித்துக்கொண்டு, தனது தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். மனைவியை சமா தானப்படுத்துவதற்காக அவரது பின்னாடியே சென்ற குமரேசன் சிறிது நேரத்தில் தனியாக வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் நதியா எங்கே என கேட்டுள்ளனர். அப்போது, நதியாவை மாடு முட்டி கிணற்றில் தள்ளிவிட்டதாக கூறி கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற பொதுமக்கள் கிணற்றில் இருந்து நதியாவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகவும், அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருப்பதாகவும் தெரிவித்தனர். தகவலறிந்த திருப்பத்தூர் தாலுகா காவல் துறையினர் நதியாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரி சோதனைக்காக அனுப்பினர்.

இதற்கிடையில், திருப்பத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் நதியாவின் தாயார் பார்வதி நேற்று புகார் செய்தார். அதில், தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப் பதாகக் கூறியுள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் விசா ரணை நடத்தினர்.

விசாரணையில், நதியா கோபித்துக்கொண்டு சென்றபோது சமாதானம் செய்ய சென்ற குமரேசன் நதியாவை சரமாரியாக தாக்கி, அருகே உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குமரேசனை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in