திருட்டு வழக்கில் குற்றவாளிகளைத் தேடிச் சென்றபோது சிக்கிய  நாட்டு வெடிகுண்டுகள்: விருதுநகர் போலீஸார் அதிர்ச்சி

திருட்டு வழக்கில் குற்றவாளிகளைத் தேடிச் சென்றபோது சிக்கிய  நாட்டு வெடிகுண்டுகள்: விருதுநகர் போலீஸார் அதிர்ச்சி
Updated on
1 min read

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருட்டு வழக்கில் குற்றவாளிகளைத் தேடிச் சென்ற நிலையில் கண்மாய் பகுதியில் 12 நாட்டு வெடிகுண்டுகள் கிடைத்ததால் காவல் துறையினர் அதிர்ச்சியடைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஹவுசிங் போர்ட் காலணி பகுதியில் சண்முகம் என்பவரின் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் வன்னியம்பட்டி மற்றும் மம்சாபுரம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வன்னியம்பட்டி காவல் நிலையம் பின்புறம் அரை கி.மீட்டர் தொலைவில் வேலங்குளம் கண்மாய் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

அப்போது அந்த கண்மாய் பகுதியில் 12 நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததை கண்ட காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அந்த நாட்டு வெடிகுண்குகளை மம்சாபுரம் காவல் துறையினர் பறிமுதல் செய்து நாட்டு வெடிகுண்டுகளை யார் வைத்தது? வன விலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி நாட்டு வெடிகுண்டை பதுக்கி வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in