Published : 14 Oct 2019 09:26 AM
Last Updated : 14 Oct 2019 09:26 AM

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முருகன் கூட்டாளியிடம் 6 கிலோ நகை பறிமுதல்

திருச்சி/சென்னை

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் நேற்று கைது செய் தனர். அவரிடமிருந்து 6.100 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி லலிதா ஜுவல்லரியில் அக்.2-ம் தேதி ரூ.13 கோடி மதிப்பிலான 28 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை போனது தொடர்பாக திருவாரூர் மணிகண்டன், இந்த கொள்ளைச் சம்பவத்தில் மூளையாக செயல் பட்ட முருகனின் சகோதரி கனக வல்லி ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். அவர்களி டமிருந்து 4.7 கிலோ நகைகள் பறி முதல் செய்யப்பட்டன. அதன் பிறகு, இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கனகவல்லியின் மகன் சுரேஷ் செங்கம் நீதிமன்றத்திலும், முருகன் பெங்களூரு நீதிமன்றத் திலும் சரணடைந்தனர்.

கர்நாடக மாநிலத்தில் சுமார் 110 திருட்டுச் சம்பவங்களில் முரு கனுக்கு தொடர்பிருப்பதால், ஒரு வழக்கு தொடர்பாக பொம்மன ஹள்ளி போலீஸார் நீதிமன்றத்தை அணுகி அக். 11 முதல் அக். 16-ம் தேதி வரை 6 நாட்கள் முருகனை காவலில் எடுத்தனர்.

முருகன் கொடுத்த தகவலின் பேரில், திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள பூசைத்துறை காவிரி ஆற்றுப்படுகையில் புதைத்து வைத் திருந்த 12 கிலோ தங்க, வைர நகைகளை திருச்சி போலீஸாருடன் இணைந்து, கர்நாடக போலீஸார் நேற்று முன்தினம் மீட்டனர். இந்த நகைகள் திருச்சி லலிதா ஜுவல் லரியில் கொள்ளையடிக்கப்பட் டவை என தெரியவந்தது. இந்த நகைகள் பெங்களூரு நீதிமன்றத் தில் ஒப்படைக்கப்பட்ட பிறகு, அங் கிருந்து பெற்று திருச்சி நீதிமன் றத்தில் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.

வாடிப்பட்டி அருகே பறிமுதல்

இதனிடையே முருகன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடு பட்ட மதுரை மாவட்டம் வாடிப்பட் டியை அடுத்த டி.மேட்டுப்பட்டி தெத்தூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த சின்னக்கருப்பன் மகன் கணேசன் (35) என்பவரை தனிப் படை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவரது வீட்டின் அருகே மறைத்து வைக்கப்பட்டி ருந்த 6.100 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கொள்ளை வழக்கில் இதுவரை ரூ.8.36 கோடி மதிப்புள்ள 22 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதால், மீதம் உள்ள நகைகளை மீட்பது தொடர்பாகவும், இந்த கொள்ளைச் சம்பவத்தில் மேலும் தொடர்புடையவர்கள் குறித்து விசாரிக்கவும், முருகனை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

முருகனின் போலீஸ் காவல் அக்.16-ம் தேதி முடியும்போது, அன்றே அவரை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி போலீஸார் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதே போல, செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்த சுரேஷின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (அக்.14) முடிவடைவதால், இன்று அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், திருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கடந்த ஜனவரி மாதம் நடந்த நகைக் கொள்ளைச் சம்பவத்திலும் முருகனுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிப்பதால், அதுதொடர்பாகவும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

சென்னை வழக்கிலும் தொடர்பு?

பெங்களூரு சிறையில் உள்ள முருகனை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை அண்ணாநகர் போலீஸாரும் முடிவு செய்துள் ளனர்.

இதுகுறித்து அண்ணாநகர் போலீஸார் கூறியதாவது: 2018-ம் ஆண்டு அண்ணா நகர் பகுதியில் மட்டும் 19 வீடுகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை போனது. இது தொடர்பாக முருகனின் கூட்டாளி கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி, ஆயிரம் யூரோ டாலர், 2 வாக்கி டாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் முருகன் கைது செய்யப்படவில்லை. இதேபோல் 2019-ம் ஆண்டிலும் சென்னை அண்ணா நகர் பகுதிகளில் அடுத் தடுத்து சுமார் 100 பவுன் நகை வரை கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்குகளிலும் முருகனுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது.

எனவே, முருகனை காவலில் எடுத்து விசாரித்தால் இந்த வழக்கு களிலும் மேலும் தகவல் கிடைக் கும் என நம்புகிறோம். அதன் அடிப் படையில் முருகனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள் ளோம். அதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x