Published : 12 Oct 2019 08:04 AM
Last Updated : 12 Oct 2019 08:04 AM
ஆர்.ஷபிமுன்னா
புதுடெல்லி
கோயம்புத்தூரில் இருந்து பெங்க ளூருவுக்கு சென்ற ஆம்னி பஸ்ஸில் 1.3 கிலோ தங்க நகைகள் செப்டம்பர் 25-ம் தேதி கொள்ளை போயிருந்தன. தமிழகத்தில் பதி வான இந்த வழக்கை உத்தரபிரதேச போலீஸார் துப்புதுலக்கி இரு வரை கைது செய்து, நகை களையும் மீட்டுள்ளனர்.
கோவையில் உள்ள மொத்த வியாபாரிகள் தமது தங்க நகை களை ஆம்னி பேருந்துகளில் பெங்களூருவுக்கு சென்று விற் பனை செய்து திரும்புவது வழக்கம். பஸ்ஸில் அயர்ந்து உறங்கும் போது அவர்களிடம் பல கிலோ எடை யுள்ள தங்கநகைகள் கொள்ளை யடிக்கும் சம்பவங்கள் அவ்வப் போது நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, உ.பி.யின் மேற்குப் பகுதியை சேர்ந்த கும்பல்களைச் சேர்ந்தவர்கள் இந்தக் கொள் ளையை செய்துவிட்டு தப்பி விடு கின்றனர். இந்தவகையில், கடந்த செப்டம்பர் 25-ம் தேதி அதிகாலை பெங்களூருவுக்கு பஸ்ஸில் வந்து சேர்ந்த தர்மா ஜுவல்லர்ஸ் பணியாளர் பி.முரளி(50) என்பவ ரிடம் அடிக்கப்பட்ட கொள்ளை வழக்கில் உ.பி. போலீஸாரே களம் இறங்கி துப்பு துலக்கி உள்ளனர்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கோவை அசோக் நகரில் உள்ள தர்மா ஜுவல்லர்ஸ் உரிமையாளரான பி.முரளி நரசிம்மன்(38) கூறும்போது, “தங்க நகைகள் கொள்ளைபோன மறு நாள் எங்கள் பகுதி காட்டூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை பதிவு செய்ய மறுத்தனர். பிறகு அமைச்சரான எஸ்.பி.வேலு மணியின் உதவியால் ரத்தினபுரி காவல்நிலையத்தில் வழக்குப் பதி வானது’ எனத் தெரிவித்தார்.
வழக்குப் பதிவானவுடன் தன் னைப் போல் நகைகளை பறி கொடுத்த கோவை மொத்த வியாபாரியான எல்.தியாகராஜன் உதவியை கேட்டுள்ளார் முரளி. இருவரும் இணைந்து உ.பி.யின் முராதாபாத் சென்றுள்ளனர்.
அங்கு உ.பி. மாநில சிறப்பு படையான பி.ஏ.சி.யில் தலைமை கமாண்டராகப் பணியாற்றும் தமிழரான ஜி.முனிராஜ் ஐபிஎஸ் அதிகாரியை சந்தித்து இந்த வழக்கில் தங்களுக்கு உதவும்படி கோரியுள்ளனர். இவர் கடந்த வருடம் உ.பி.யின் புலந்த்ஷெஹர் மாவட்ட எஸ்.பியாக இருந்தவர். அப்போது, தியாகராஜனின் பணி யாளர்களிடம் அக்டோபர் 11, 2017-ல் இதேமுறையில் கொள்ளையில் ஈடுபட்ட மூவரை புலந்த்ஷெஹர் மற்றும் பஞ்சாபின் ஜலந்தரிலும் கைது செய்து தமிழகத்துக்கு ஐபிஎஸ் அதிகாரி முனிராஜ் அனுப்பி வைத்திருந்தார்.
இந்நிலையில், கோவை தங்க நகை கொள்ளை வழக்கில் உதவு மாறு உ.பி. மேற்குப்பகுதி மாவட்டங்களில் எஸ்.பி.க்களாக பணிபுரிந்து வரும் தனது சக அதிகாரிகளிடம் முனிராஜ் கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில் அவர்கள் பஸ்ஸில் பதிவு செய்த செல்போன் எண்களை போலீஸார் ஆராய்ந்துள்ளனர். இதில், அக்கொள்ளையர்கள் நட மாட்டம் பரேலியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து, பிஜ்னோரை சேர்ந்த கொள்ளையர்கள் எக்ஸான்(47), தேவேந்தர்(25) ஆகிய இருவரை நேற்று இரவு பரேலி போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர் களிடமிருந்து கொள்ளயடிக்கப் பட்ட ரூ.44 லட்சம் மதிப்புள்ள அனைத்து நகைகளும் மீட்கப் பட்டுள்ளன.
இதுபோல் ஆம்னி பஸ்களில் சுமார் பத்து வருடங்களாக தங்க நகைகள் கொள்ளையடிக்கப் பட்டதில் சுமார் ஆறு வழக்குகள் மட்டுமே கோவை மற்றும் சென்னை நகர காவல்நிலையங்களில் பதி வானதாகக் கூறப்படுகிறது. இதில் சிலவற்றில் கொள்ளையர்கள் கைதானாலும் அவர்களிடம் எந்த நகைகளும் மீட்கப்பட்டதில்லை.
செப்டம்பர் 25-ம் தேதி நடந்த கொள்ளை வழக்கில் தமிழரும் உ.பி.யின் ஐபிஎஸ் அதிகாரியுமான முனிராஜின் உதவியால் சம்பந்தப் பட்ட நபர்கள் கைது செய்யப்பட்ட துடன், நகைகளும் திரும்பக் கிடைத்துள்ளன.