Published : 01 Oct 2019 09:36 AM
Last Updated : 01 Oct 2019 09:36 AM

நீட் தேர்வில் ஆள் மாறாட்ட வழக்கு: தருமபுரி மருத்துவ கல்லூரி முதல்வருக்கு சம்மன்; தலைமறைவு மாணவர் தந்தையிடம் தீவிர விசாரணை

தேனி

நீட் தேர்வில் ஆள் மாறாட்ட வழக் கின் விசாரணைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல் வர் சீனிவாச ராஜு, தேனி சிபிசிஐடி போலீஸில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித்சூர்யா (20). இவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த தைத் தொடர்ந்து இவரையும், இவரது தந்தை டாக்டர் வெங்க டேசனையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

இவர்களிடம் பெற்ற வாக்கு மூலம் அடிப்படையில் மேலும் பலர் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை யைச் சேர்ந்த ராகுல், பிரவீன், அபிராமி ஆகியோர் விசாரணைக் காக தேனி வரவழைக்கப்பட்ட னர். முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில், மாணவி அபிராமி மட்டும் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிரவீன் அவரது தந்தை சரவ ணன், ராகுல், அவரது தந்தை டேவிஸ் ஆகியோர் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பான் என்பவரும் நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடியில் ஈடு பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் செல்வதற்குள் அவர் தலைமறைவாகி விட்டார். இத னால் அவரது தந்தை முகமது ஷபியைக் கைது செய்து தேனி சிபிசிஐடி அலுவலகத்துக்கு நேற்று அழைத்து வந்தனர்.

சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார் தலைமையில் முகமது ஷபியிடம் ஏழு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. இதில் தரகர் ரஷீத் என்பவர் மூலம் நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட தும், வேதாசலம் என்பவர் தான் இந்த தரகரை அறிமுகப்படுத்தினார் என்றும் முகமது ஷபி தெரிவித்துள் ளார். இதையடுத்து ரஷீத், வேதாச லம் ஆகியோரைக் கைது செய்வ தற்கான நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து எஸ்பி விஜய குமார் கூறியதாவது: தலைமறை வாக உள்ள மாணவர் இர்பான் மொரிஷீயஸ் நாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத் துள்ளது. அவரைக் கைது செய் வதற்கான முயற்சி மேற்கொள்ளப் பட்டது. அவர் படித்த தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல் வர் சீனிவாச ராஜு இன்று (செவ் வாய்) தேனி சிபிசிஐடி அலு வலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

ஜாமீன் கோரி மனு தாக்கல்

தற்போது மதுரை சிறையில் உள்ள உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன் ஜாமீன் கேட்டு தேனி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் துள்ளார். இதில் தனக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டது. இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 3-ம் தேதி நடைபெற உள்ளது.

மாணவர் ஆஜராகவில்லை

இதனிடையே தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் இர்பான் நேற்று சரிபார்ப்புக்காக ஆஜராகவில்லை என கல்லூரி முதல்வர் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து தருமபுரி மருத்து வக் கல்லூரி முதல்வர் சீனிவாச ராஜு கூறியதாவது: ‘தொடர் விடுப் பில் இருந்து வரும் முதலாமாண்டு மாணவர் இர்பான் இன்று (30-ம் தேதி) சான்றிதழ்களை சரிபார்க்க ஆஜராவார் என எதிர்பார்த்தோம். இருப்பினும் பகல் 1 மணி வரை அந்த மாணவர் நேரிலும் வர வில்லை. அவர் குறித்த தகவலும் எதுவும் வரவில்லை. எனவே, இது பற்றிய தகவலை மருத்துவக் கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள் ளோம். இது தொடர்பாக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விரைவில் எங்களுக்கு வழி காட்டுதல் வழங்கப்படும்’ என்றார்.

தரகர்கள் மூலம் முறைகேடு

நீட் தேர்வில் தரகர் மூலமே ஆள்மாறாட்ட முறைகேடு நடந்துள்ளது. எனவே தரகர்கள் ரஷீத், வேதாசலத்தைப் பிடிப்பதற்கான முயற்சியில் சிபிசிஐடி போலீஸார் மும்முரம் காட்டி வருகின்றனர். இருப்பினும் தலைமறைவாக உள்ள மாணவர் இர்பானை சேலம் அருகே போலீஸார் கைது செய்துள்ளதாகவும், ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் தரகர் ரஷீத்தையும் ஏற்கெனவே கைது செய்து தீவிரமாக விசாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் வெளியே கசிந்தால் விசாரணை பாதிக்கப்படும் என்பதாலும், இந்த வழக்கில் தொடர்புடைய பலரும் தப்பிக்க வாய்ப்புள்ளது என்பதாலும் போலீஸார் இதை உறுதி செய்ய தயங்குவதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x