

நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த் தாண்டத்தில் கேரளாவைச் சேர்ந்த சவுத் (23) என்பவர் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் வாடகை காருக்கு கொடுத்த 500 ரூபாய் மீது, கார் ஓட்டுநர் வினுவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மார்த்தாண்டம் போலீஸாருக்கு அவர் தகவல் தெரிவித்தார்
சவுத்திடம் போலீஸார் விசா ரணை நடத்தியதில், அவர் கள்ள நோட்டுகளை தமிழக, கேரள எல்லைப் பகுதிகளில் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.
அவரது அறையில் 200, 500 ரூபாய் கள்ளநோட்டுகள் மொத்தம் ரூ.77 ஆயிரம் இருந்தன. ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுப்பதற்கு பயன்படுத்திய இயந் திரமும் இருந்தது. அவற்றை போலீ ஸார் பறிமுதல் செய்து, சவுத்தை கைது செய்தனர்.
இதற்கு உடந்தையாக இருந்த மருதங்கோட்டைச் சேர்ந்த மணி யன்(51), மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த சிபிசாமி(45), திருவரம் பைச் சேர்ந்த ஜேக்கப்(40), மணலிக் கரையை சேர்ந்த ஜெஸ்டின் சேகர் (39) ஆகியோரும் கைதாகினர்.