வண்டலூர் அருகே மருத்துவக் கல்லூரி பெண் பேராசிரியரை அறையில் அடைத்து சித்ரவதை: துணை முதல்வர் உட்பட 5 பேர் மீது வழக்கு

வண்டலூர் அருகே மருத்துவக் கல்லூரி பெண் பேராசிரியரை அறையில் அடைத்து சித்ரவதை: துணை முதல்வர் உட்பட 5 பேர் மீது வழக்கு
Updated on
1 min read

வண்டலூர்

வண்டலூர் அருகே ரத்தினமங்கத் தில் உள்ள தனியார் பல் மருத் துவக் கல்லூரி பெண் பேராசிரி யரை அடைத்து சித்ரவதை செய் ததாக, கல்லூரி துணை முதல்வர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வண்டலூர் அருகே ரத்தின மங்கலத்தில் தனியார் பல் மருத் துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இக்கல்லூரியில் பபீலா (26) என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கல்லூரி விடுதியில் தங்கி உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவர் கடந்த 19-ம் தேதி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் கல்லூரியில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டியதால், கல்லூரியின் துணை முதல்வர் வெங்கடகிருஷ்ணன், கல்லூரி பொது மேலாளர் சசிகுமார், நிதி பிரிவு அலுவலர் செந்தில்குமார், கல்லூரியின் நிர்வாக அலுவல கத்தில் பணிபுரியும் லட்சுமிகாந் தன், துப்புரவு பணியாளர் முனியம் மாள் ஆகியோர் தன்னைப்பற்றி அவதூறாக பேசி, பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், இதை எதிர்த்துக் கேட்டதால் தன்னை தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்வதாகவும், ஆகவே தன்னை காப்பாற்றி நீதி வழங்குமாறும் அழுதபடி கூறியிருந்தார்.

மேலும், கடந்த ஒரு வாரமாக தனக்கு உணவு, தண்ணீர் வழங்க வில்லை என்றும், தன்னை தற் கொலை செய்துகொள்ள தூண்டு வதாகவும் அவர் அந்த வீடியோ பதிவில் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக தாழம்பூர் போலீஸார் ஆரம்பத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவாகரம் சமூக வலை தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறை உயரதி காரிகளின் உத்தரவின்படி தாழம் பூர் போலீஸார் அந்தப் பெண் பேராசிரியரிடம் புகாரை பெற் றுக்கொண்டு, விசாரணையை மேற்கொண்டனர். அப்புகாரின் அடிப்படையில் கல்லூரி துணை முதல்வர் வெங்கடகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in