Published : 24 Sep 2019 08:40 AM
Last Updated : 24 Sep 2019 08:40 AM

கிருஷ்ணகிரி மலைக்கு அழைத்துவந்து தீவிரவாதியிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை: வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி 

கிருஷ்ணகிரி மலைக்கு தீவிர வாதியை அழைத்து வந்து தேசிய புலனாய்வு பிரிவினர் நேற்று விசாரணை நடத்தி, வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் கடந்த மாதம் 7-ம் தேதி ஜமாத் உல் முஜாஹிதீன் வங்கசேதம் (ஜேஎம்பி) என்கிற தீவிரவாத அமைப்பின் தலைவர் கவுசர் என்கிற ஜஹிதுல் இஸ்லாம்(39) என்பவரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் (என்ஐஏ) கைது செய்தனர்.

இவரிடம் நடத்திய விசார ணையில், தீவிரவாதி கவுசர், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மலையில் பதுங்கியிருந்து வெடிகுண்டுகளை தயார் செய்தும், சோதனைகள் நடத்தி, நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தேசிய புல னாய்வு பிரிவு காவல் கண்காணிப் பாளர் சி.வி.சுப்பாரெட்டி தலைமை யில் 25 கர்நாடக போலீஸார் பாது காப்புடன் கவுசரை, விசாரணைக் காக கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்தனர்.

இங்கு கிருஷ்ணகிரி மலை மீது அழைத்து சென்றவர்கள், மலை யில் எந்த இடத்தில் வெடிகுண்டு கள் தயாரிப்பு, சோதனையிட்டது குறித்து விவரங்களை கேட்டறிந்த னர். மேலும், வெடிகுண்டு சோதனை நடத்த பயன்படுத்திய பைப்புகள், 4 பேட்டரி, வயர்கள் உள்ளிட்ட வற்றை பறிமுதல் செய்தனர். காலை 8 மணிக்கு தொடங்கிய விசாரணை, பகல் 1.30 மணி வரை நீடித்தது. இதனை தொடர்ந்து, தீவிரவாதி கவுசரை, தேசிய புலனாய்வு பிரிவினர் பெங்களூருவுக்கு அழைத்து சென்றனர்.

தொடரும் விசாரணை

இதே அமைப்பை சேர்ந்த தீவிர வாதி ஹபீப் உர் ரஹ்மான்ஷேக்(28) என்பவரை தேசிய புலனாய்வு பிரி வினர், கடந்த ஜூன் மாதம் 25-ம் தேதி பெங்களூரு, தொட்டபல்லா பூர் பகுதியில் கைது செய்தனர். அவரை, கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி தேசிய புலனாய்வு பிரிவினர் கிருஷ்ணகிரி மலைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து நேற்று தீவிரவாதி கவுசரிடம், மலையில் விசாரணை நடத்தி உள்ளனர். கிருஷ்ணகிரி மலைக்கு அடுத் தடுத்து 2 தீவிரவாதிகள் அழைத்து வந்து விசாரணை செய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x