

சென்னை
கூட்டுறவு சங்க பண மோசடி வழக் கில் தேடப்பட்ட நபர் 20 ஆண்டு களுக்குப் பின்னர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வன். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு கூட்டுறவு சங்கத்தில் உதவி யாளராக பணியாற்றி வந்தார். அப்போது அவர் போலியான ஆவணங்கள் மூலம் சங்கத்தின் பணத்தை மோசடி செய்ததை கூட்டுறவு சங்க அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் நாகப்பட்டினம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தாமரைச் செல்வனை கைது செய்ய முயன்றபோது, அவர் தலைமறைவாகி விட்டார்.
வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் இருக்க அவரை ‘தேடப்படும் குற்றவாளி’ என்று அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக் கும் போலீஸார் லுக்அவுட் நோட் டீஸ் அனுப்பினர். இந்நிலையில் தாமரைச் செல்வன் சிங்கப்பூர் செல் வதற்காக நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையம் வந்தார். குடியுரிமை அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது அவர் தேடப்படும் குற்றவாளி என் பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் தாமரைச் செல்வனை கைது செய்தனர். பின்னர் நாகப்பட் டினம் போலீஸாரை சென்னைக்கு வரவழைத்து அவர்களிடம் தாம ரைச்செல்வனை ஒப்படைத்தனர்.