

ஆண்டிபட்டி
மகாராஷ்ட்ராவில் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிவிட்டு தேனி மருத்துவக் கல்லூரியில் சென்னை மாணவர் ஒருவர் சேர்ந்துள்ளதாக காவல் நிலையத்தில் டீன் புகார் செய்துள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி க.விலக்கு அருகே தேனி அரசு மருத்துவக் கல்லூரி செயல்படு கிறது. இங்கு படிக்கும் மாணவர் ஒருவர் குறித்து சமூக வலைதளங் களில் கடந்த வாரம் தகவல் பரவி யது. அதில், சென்னையைச் சேர்ந்த மாணவர் 2 முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார்.
3-ம் முறையாக மகாராஷ்டிரா மையத்துக்கு விண்ணப்பித்து ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதிய வரும், தற்போது பயிலும் மாண வரும் வேறுவேறு நபர்கள். எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந் தது.
இதுகுறித்து சென்னையில் இருந்து அசோக் கிருஷ்ணன் என்பவர் டீன் ராஜேந்திரனுக்கு கடந்த 11, 13 ஆகிய தேதிகளில் மின்னஞ்சல் மூலம் புகார் செய் துள்ளார். இதேபோல் மருத்துவக் கல்லூரி இயக்ககம், டெல்லியில் உள்ள தேசிய தேர்வுகள் முகமைக் கும் புகார்கள் சென்றுள்ளன. இதைத் தொடர்ந்து தேனி மருத் துவக் கல்லூரியில் விசாரணை நடைபெற்றது. இதில் ஹால் டிக்கெட்டில் இருந்த மாணவர் படமும், தற்போது படிக்கும் மாண வரின் படமும் வேறுவேறு எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து டீன் ராஜேந்திரன் க.விலக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத் துள்ளார்.
போலீஸார் கூறும்போது, மாண வர் உதித் சூர்யா மற்றும் ஆள்மாறாட் டம் செய்த அடையாளம் தெரி யாத நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய மற்றும் கவுன்சிலிங்குக்கு வந்த நபரும், சேர்க்கப்பட்ட மாண வரும் ஒன்றுதானா என்பதை எளிதில்கண்டறியலாம்.
கேமரா பதிவு உள்ளிட்ட வற்றை ஆய்வு செய்ய வேண் டும். இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர் கல்லூரியில் இருந்து மாயமானது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றனர்.
இதுகுறித்து டீன் ராஜேந்திரன் கூறும்போது, சென்னையைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் மீது மின்னஞ்சல் மூலம் புகார் வந் தது. விசாரணையில் புகாரில் உண்மை இருப்பதாகத் தோன்றவே மருத்துவக் கல்வி உயர் அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்தோம். மேலிட உத்தரவைத் தொடர்ந்து க.விலக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது உறுதி செய்யப்பட்டால் சென்னை மாண வர் உதி சூர்யா மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்தார்.