

சென்னை
தென் மாவட்டங்களுக்கு சுற்றுலா செல்வதாகக் கூறி வாடகை காரில் சென்ற கும்பல், ஓட்டுநரை கொலை செய்து காரை கடத்திச் சென்றது.
சென்னை அசோக் நகர் 30-வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தர். டிராவல்ஸ் நிறுவனம் வைத்துள் ளார். இவரிடம் ஓட்டுநராக இருப்ப வர் நாகநாதன். இந்நிலையில், குற் றாலம் மற்றும் தென் மாவட்டங் களில் சுற்றுலா செல்ல வேண்டும் என்று குரோம்பேட்டையில் இருந்து 4 பேர், காரை வாடகைக்கு கேட்டதின்பேரில், ஒரு காரை அனுப்பியுள்ளார். அதன் ஓட்டுந ராக நாகநாதன் இருந்தார்.
குரோம்பேட்டையில் இருந்து கடந்த 5-ம் தேதி இரவு ஒரு பெண்ணும், 3 இளைஞர்களும் காரில் ஏறியுள்ளனர். 8-ம் தேதி இரவு நெல்லையில் இருப்பதாக வும், மறுநாள் சென்னை வந்து விடு வோம் என்றும் ஓட்டுநர் நாகநாதன், கார் உரிமையாளர் சுந்தரிடம் பேசி உள்ளார். ஆனால், அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ள முடிய வில்லை. இதுபற்றி அசோக் நகர் போலீஸில் சுந்தர் புகார் அளித்தார்.
இந்நிலையில் மதுரை மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி பகுதியில் அழுகிய நிலையில் ஆணின் உடல் கிடப்பதாக நேற்று முன்தினம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. விசாரணையில் அது நாகநாதன் உடல் என்பது தெரியவந்தது.
காரிலேயே நடந்த கொலை
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
நெல்லையில் இருந்து 8-ம் தேதி இரவு நாக நாதன், காரில் 4 பேரையும் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு புறப்பட் டுள்ளார். அப்போது நாகநாதனை காரில் வைத்தே கொலை செய் துள்ளனர். பின்னர் மதுரை மேலூர் அருகே வந்ததும் கொட்டாம் பட்டி பகுதியில் சாலை ஓரமாக இருந்த சிறிய உறை கிணற்றில் உடலை வீசியுள்ளனர். அவர் அணிந்திருந்த உடை மற்றும் கை யில் கட்டி இருந்த கயிறு ஆகிய வற்றை வைத்து உறவினர்கள் அடையாளம் காட்டினர்.
நாகநாதனை கொன்று காரை கடத்திச் சென்ற கும்பல் குறித்து இன்னும் தகவல் கிடைக்கவில்லை. காரில் பயணம் செய்த கொலை யாளிகளில் ஒருவர், ஓட்டுநர் நாகநாதனிடம் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது தொலைந்து போன வேறு ஒருவரின் செல்போன் என்பது தெரிய வந்தது. அந்த செல்போன் எண்ணும் தற்போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
கொலையாளிகளைப் பிடிக்க அசோக்நகர் போலீஸார் தரப்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொட்டாம்பட்டி போலீஸாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.