

சென்னை
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட தாக சென்னையைச் சேர்ந்த 2 இளைஞர்களை வேப்பேரி போலீ ஸார் கைது செய்துள்ளனர். அவர் களிடமிருந்து ரூ.53 லட்சம் பறி முதல் செய்யப்பட்டுள்ளன.
மேற்கிந்திய தீவில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சூதாட்டம் நடப்பதாகவும், இதில் சென்னையைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டு வருவதாகவும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கீழ்பாக்கம் காவல் துணை ஆணை யருக்கு காவல் ஆணையர் உத்தர விட்டார். அதன்படி, வேப்பேரி காவல் நிலைய போலீஸார் தனிப் படை அமைத்து விசாரித்து வந்த னர். முதல்கட்டமாக சூளை நெடுஞ்சாலையில் உள்ள கடை ஒன்றின் மாடியில் இருந்த அறையில் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர். அங்கிருந்த சவுகார்பேட்டையைச் சேர்ந்த ராகுல் டி ஜெயின் (24), தினேஷ் குமார் (29) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.53 லட்சம், 3 லேப்டாப்கள், 3 செல்போன்கள் மற்றும் பணம் எண்ணும் இயந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய் யப்பட்டன. இவர்கள், ஆன் லைன் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்ட தாக போலீஸ் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இவர்களிடம் பணம் கட்டி ஏமாந்தவர்கள் யார் யார்? சூதாட் டம் தொடர்பாக வெளிநாட்டு நபர் களுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.