Published : 10 Sep 2019 22:28 pm

Updated : 10 Sep 2019 22:28 pm

 

Published : 10 Sep 2019 10:28 PM
Last Updated : 10 Sep 2019 10:28 PM

சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின் இருவழிப்பாதை ஆகும் அண்ணாசாலை: போக்குவரத்து மாற்றம்; 2 நாள் சோதனை ஓட்டம்

after-7-years-the-two-lane-freeway-traffic-change-2-day-test-drive-in-anna-salai

மெட்ரோ ரயில் பணிகளுக்காக கடந்த 2012-ம் ஆண்டு ஒரு வழிப்பாதை ஆக்கப்பட்ட அண்ணா சாலை படிப்படியாக இருவழிப்பாதை ஆக்கப்பட்டாலும் எல்.ஐ.சி முதல் ஜெமினி வரை மாற்றப்படாமல் இருந்தது. தற்போது நாளை முதல் 2 நாள் சோதனை ஓட்டம் தொடங்குகிறது.

இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:

“தற்போது அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்த நிலையில் அண்ணா சாலை மற்றும் ஜி.பி.ரோடு முதல் அண்ணா சாலை மற்றும் ஒயிட்ஸ் ரோடு வரை மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது.

அதற்கான சோதனை ஓட்டம் நாளை (11.9.2019) மற்றும் 12.09.2019 ஆகிய தேதிகளில் சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல்துறையினரால் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மேற்கண்ட நாட்களில் அனைத்து வாகன ஓட்டிகளும் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்களை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்டுகிறார்கள்.

1. அண்ணா சாலையில் ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து வெலிங்டன் சந்திப்பு வரை இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.

2. தற்போது ஜி.பி.ரோட்டில் நடைமுறையில் உள்ள ஒருவழிப்பாதை மாற்றியமைக்கப்பட்டு, ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து வாகனங்கள் வெலிங்டன் சந்திப்பு நோக்கி அனுமதிக்கப்படுகிறது. மாறாக வெலிங்டன் சந்திப்பில் இருந்து ராயப்பேட்டை மணிகூண்டு வரை வாகனங்கள் செல்லத் தடை செய்யப்படுகிறது.

3. ஒயிட்ஸ் ரோடு இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.

4. ராயப்பேட்டையில் மணிக்கூண்டில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா சாலை நோக்கியும், அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டை நோக்கியும் ஒயிட்ஸ் ரோட்டில் அனுமதிக்கப்படுகிறது.

5. ஸ்மித் ரோடு ஒரு வழிப்பாதையாகவே முன்பு இருந்தது போன்றே ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்ல அனுமதிக்கப்படுகிறது.

6. அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கி வரும் வாகனப் போக்குவரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

7. அண்ணா சிலையில் இருந்து ஜெமினி அல்லது தேனாம்பேட்டை நோக்கிச் செல்லும் வாகனங்கள் எல்.ஐ.சி மற்றும் டி.வி.எஸ். வழியாக அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லலாம்.

8. அண்ணா சிலையில் இருந்து பின்னி சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் செல்லலாம்.

9. பாரதி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.பி.ரோடு மற்றும் ஒயிட்ஸ் ரோடு வழியாக அண்ணா சாலை சென்றடையலாம்.

10. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து (வெஸ்ட் காட் ரோடு) அண்ணா சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டு அடைந்து ஒயிட்ஸ் ரோடு மற்றும் ஜி.பி.ரோடு வழியாகச் செல்லலாம்.

11. பின்னி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணா சாலை மற்றும் அண்ணா மேம்பாலம் செல்லலாம்.

12. பின்னி சாலையில் இருந்து பாரதி சாலை செல்ல அண்ணா சாலை பட்டுலாஸ் சாலை வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி ஒயிட்ஸ் ரோடு மற்றும் ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாகச் செல்லலாம்.

13. பின்னி சாலையில் இருந்து ஒயிட்ஸ் ரோடு செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணா சாலை பட்டுலாஸ் சாலை வழியாகச் சென்று ஒயிட்ஸ் ரோட்டிற்குச் செல்லலாம்.

14. கிரீம்ஸ் சாலையில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்ல வேண்டிய வாகனங்கள் அண்ணா சாலை மற்றும் ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் U Turn and Right Turn எடுத்து அண்ணா மேம்பாலம் மற்றும் ஒயிட்ஸ் சாலை செல்லலாம்.

15. அண்ணா சாலையில் இருந்து ஸ்மித் ரோடு வழியாக ஒயிட்ஸ் ரோடு செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது.

16. ஒயிட்ஸ் சாலையில் இருந்து அண்ணா சாலை செல்லும் வாகனங்கள் திரு.வி.க. சாலையில் இடதுபுறம் திரும்பி பின்னர் சத்யம் தியேட்டர், கான்டான் சுமித் சாலை சந்திப்பு, பீட்டர்ஸ் சாலை வழியாக அண்ணா சாலையை அடையலாம்”.

இவ்வாறு போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் பணிஒரு வழிப்பாதைஅண்ணா சாலைஇருவழிப்பாதைஎல்.ஐ.சிஜெமினி2 நாள் சோதனை ஓட்டம்ஜிபி சாலைபோக்குவரத்து போலீஸார்After 8 yearsTwo-lane freewayTraffic change2-day test driveAnna salaiTraffic police

You May Like

More From This Category

More From this Author