ஆர்.சீனிவாசன்

Published : 10 Sep 2019 17:16 pm

Updated : : 10 Sep 2019 17:16 pm

 

சேலம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு: இருவர் படுகாயம்

accident-near-salem
சிசிடிவி காட்சி

சேலம்

சேலம் திருமலைகிரி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இருவர் படுகாயம் அடைந்தனர்.

சேலம் சிவதாபுரம் அருகே உள்ள திருமலைகிரி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். அவரும் அவரது பேரன் அரவிந்தும் இன்று (செப்.10) சேலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திருமலைகிரி பகுதியில் வந்துகொண்டிருந்தபோது எதிரில் இருசக்கர வாகனத்தில் வந்த சக்திவேல் என்பவர் எதிர்பாராவிதமாக கணேசன் ஓட்டிவந்த வாகனத்தின் மீது மோதினார்.

இதனால் இருவரும் தூக்கி எறியப்பட்டனர். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் கணேசன், அரவிந்த் ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய சக்திவேலுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. அவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடப்பதால் பயணிகள் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விபத்துகுற்றம்AccidentCrime
Popular Articles

You May Like

More From This Category

More From this Author