

திருப்பூர்
திருப்பூரில் கடைக்கு முன் நின்ற இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சிசிடிவி காட்சியைக் கொண்டு போலீஸார் விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் குமரன் சாலையில் தனியார் ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் மணிமாறன். இவர் இன்று (புதன்கிழமை) காலை 8 மணியளவில் தன் கடையைத் திறப்பதற்காக, வண்டியை வெளியே சாவியுடன் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியே செல்போனில் பேசியபடி சென்ற இளைஞர் ஒருவர் சாவியுடன் வண்டி நிற்பதைப் பார்த்து, வண்டியை அவசரமாக எடுத்துச் செல்வது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து மணிமாறன் கொடுத்த புகாரையடுத்து சிசிடிவி காட்சி ஆதாரங்களைக் கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.