இ.மணிகண்டன்

Published : 03 Sep 2019 10:18 am

Updated : : 03 Sep 2019 10:22 am

 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து: தந்தை, மகள் பலி

accident-near-srivilliputhur

விருதுநகர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை மற்றும் மகள் என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநரைக் கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த தீயணைப்பு நிலைய அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி மில்டன் ஜெயக்குமார் மற்றும் அவரது மகள் ரெனி லாரோஸ் இருவரும் சேலத்திற்கு சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் நத்தம் விலக்கு பகுதியில் கேரளாவில் இருந்து வந்த லாரியின் மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாைனது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த தந்தை மில்டன் ஜெயக்குமார் மற்றும் அவரது மகள் ரெனி லாரோஸ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்தில் பலியான தந்தை, மகளின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Accident near srivilliputhurசாலை விபத்து
Popular Articles

You May Like

More From This Category

More From this Author