செய்திப்பிரிவு

Published : 28 Aug 2019 10:16 am

Updated : : 28 Aug 2019 10:16 am

 

தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமாரின் உறவினர் வெட்டிப்படுகொலை: முன்விரோதம் காரணமா என போலீஸ் விசாரணை

tenkasi-mp-s-relative-murdered

விருதுநகர்,

தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினர் தனுஷ் எம்.குமாரின் நெருங்கிய உறவினர் நேற்றிரவு மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் கிராமத்தைச் சேர்ந்தவர் திமுக எம்.பி. தனுஷ் எம்.குமார். இவருடைய உறவினர் (சித்தப்பா) கருப்பையா வயது 55. இவர் அப்பகுதியில் ரேஷன் கடையில் எடை போடும் வேலை பார்த்து வருகிறார்.

நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை இரவு) இவர் தேவதானம் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .சடலமாகக் கிடந்த கருப்பையாவைப் பார்த்த அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சேத்தூர் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் வந்த சேத்தூர் போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி யார் கொலையாளி யார்? என்று போலீஸார் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.


கொலை நடந்த இடத்திற்கு மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன் நேரில் பார்வையிட்டு கொலையாளிகளை விரைந்து பிடிக்க போலீஸாருக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது அரசியல் பகையா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கொலையால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

தனுஷ் எம்.குமார்தென்காசி எம்.பி.
Popular Articles

You May Like

More From This Category

More From this Author