Published : 28 Aug 2019 08:08 AM
Last Updated : 28 Aug 2019 08:08 AM

தாய், 3 மகள்களை கொலை செய்த சமையல் கலைஞருக்கு 4 ஆயுள் தண்டனை: சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

 சென்னை 

கணவனை பிரிந்து வாழ்ந்த பெண்ணையும், அவரது 3 மகள்களையும் கொலை செய்த சமையல் கலைஞருக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் 4 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பாண்டி யம்மாள். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவரை பிரிந்த இவர், தனது 3 மகள்களுடன் வசித்து வந்தார். இதன் பிறகு, சமையல் கலை ஞரான சின்னராஜ் என்ற உதயன் என்பவருடன் பாண்டியம்மாளுக்கு நட்பு ஏற்பட்டது.

சென்னை ராயப்பேட்டை முத்து தெருவில் பாண்டியம்மாளின் வீட்டிலேயே உதயனும் ஒன்றாக வசித்து வந்தார்.

கடந்த 2016-ம் ஆண்டில் பாண்டியம்மாளின் மகள்களிடம் உதயன் தவறாக நடக்க முயன்ற தால், அவரை கண்டித்த பாண்டியம்மாள் அவரை வீட்டைவிட்டு விரட்டியுள்ளார். இதில் கோபமடைந்த உதயன் 2016 ஜூன் மாதத்தில் பாண்டியம்மாள் மற்றும் அவரது 3 மகள்களை உலக்கையால் அடித்து கொலை செய்தார். சிறுமிகள் உயிரிழந்த பிறகு அவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் கோபால குரு மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 302, 377-ன் கீழ் உதயன்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை மகளிர் நீதிமன்றத் தில் நீதிபதி மஞ்சுளா முன்பு வழக்கு விசாரணை நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக் கறிஞர் ஸ்ரீலேகா ஆஜராகி வாதிட்டார்.

விசாரணை முடிந்த நிலை யில், இந்த வழக்கில் நீதிபதி மஞ்சுளா நேற்று தீர்ப்பு கூறி னார். குற்றம்சாட்டப்பட்ட உதய னுக்கு 4 ஆயுள் தண்டனை விதித் தும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x