ஏடிஎம்களில் நிரப்ப வைத்திருந்த ரூ.16 லட்சத்தை திருச்சி வங்கியில் திருடியவர் பெரம்பலூரில் கைது

ஏடிஎம்களில் நிரப்ப வைத்திருந்த ரூ.16 லட்சத்தை திருச்சி வங்கியில் திருடியவர் பெரம்பலூரில் கைது
Updated on
1 min read

பெரம்பலூர்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு வங்கி யில் இருந்து ஏடிஎம்களில் நிரப்பு வதற்காக கொண்டு செல்ல வைத் திருந்த ரூ.16 லட்சத்தை திருடிய நபரை பெரம்பலூரில் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரை பிடித்துக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் பாராட்டினர்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலை யம் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இருந்து ஏடிஎம் களில் நிரப்புவதற்காக தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் 2 பேர் கடந்த 20-ம் தேதி வந்திருந்த னர். அவர்கள் வங்கியில் இருந்து ரூ.16 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு ஒரு பையில் வைத்திருந்த னர். அப்போது, அந்தப் பணம் திடீரென காணாமல் போனது. இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் முருகையா(43) என்பவரை நேற்று முன்தினம் இரவு ஒரு நபர் சவாரிக்கு அழைத்து, ஏதாவது ஒரு லாட்ஜில் அறை எடுத்து தருமாறு கூறியுள்ளார். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது போதையில் இருந்துள்ளார்.

ஒரு லாட்ஜ்-க்கு சென்றபோது அடையாள அட்டை கேட்டுள்ளனர். அப்போது, ஆட்டோவில் உள்ள தனது பெட்டியில் ஓட்டுநர் உரிமம் இருப்பதாகவும், அதை எடுத்து வரும்படியும் ஆட்டோ ஓட்டுநர் முருகையாவிடம் அந்த நபர் கூறியுள்ளார்.

ஆட்டோவில் வைத்திருந்த அந்தப் பெட்டியை முருகையா திறந்து பார்த்தபோது, அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதை யடுத்து, அந்த நபரை பெரம்பலூர் போலீஸில் முருகையா ஒப்படைத் தார்.

விசாரணையில், அவர், திருச்சி பாலக்கரை அந்தோனியார் கோயில் தெருவைச் சேர்ந்த சவரிமுத்து மகன் ஸ்டீபன்(41) என்பதும், திருச்சி யில் உள்ள வங்கியில் இருந்து ஏடிஎம்களில் நிரப்புவதற்காக வைத்திருந்த பணத்தை திருடியவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர் திருச்சி கோட்டை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.13 லட்சத்தை பறிமுதல் செய்தனர். ஆட்டோ ஓட்டுநர் முருகையாவை போலீஸார் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in