

சென்னை
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் அண்ணாநகரில் இயங்கி வந்த சட்டவிரோத தொலைபேசி இணைப்பகத்தில் 1,500 சிம் கார்டுகளுடன், நவீன தொழில் நுட்பக் கருவிகளைக் கொண்டு முறைகேடு நடந்துள்ளது. இது தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு துறையின் தமிழ்நாடு, புதுச்சேரி பிராந்திய துணை தலைமை இயக்குநர்கள் எஸ்.பார்த்திபன் (பாதுகாப்பு), ஆர்.ராதா (தொழில்நுட்பம்) ஆகி யோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வெளிநாட்டில் இருந்து வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் என்ற தொழில்நுட்பம் வழியாக தொலைபேசி அழைப்புகள் தமிழ கத்துக்கு வருகின்றன. அதை அதிகாரப்பூர்வ வெளிநாட்டு தொலைத்தொடர்பு இணைப்பகங் களின் உதவியின்றி, சிம் பாக்ஸ் கருவி மூலம் சில இணைப்பகங்கள் சட்ட விரோதமாக உள்ளூர் தொலை பேசி அழைப்புகளாக மாற்றி வழங்குகின்றன. இவ்வாறு அண் ணாநகர், தங்கம் காலனி பகுதியில் ஒரு வீட்டில் இணைப்பகம் இயங்கி வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் உதவியுடன் கடந்த 21-ம் தேதி அங்கு சோதனை நடத்தப்பட்டது.
5 பேர் கைது
அப்போது, அங்கு அதிநவீன தொலைத்தொடர்பு கருவிகளைக் கொண்டு சட்டவிரோத தொலை பேசி இணைப்பகம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த கருவிகள் மற்றும் 1,500 சிம் கார்டுகள் பறி முதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் தொலைத்தொடர்பு சட்ட விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நமது கைபேசிக்கு வெளிநாட் டில் இருந்து அழைப்பு வரும். அது உள்ளூர் எண்ணாகவோ அல்லது எண் ஏதும் இல்லாமலோ இருக்கும். இவை சட்டவிரோத அழைப்புகளாகும். இதுபோன்ற அழைப்புகள் யாருக்கேனும் வந்தால் 1800 110 420 1936 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் தெரிவிக் கலாம். அவ்வாறு தெரிவிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில்தான் இந்த இணைப்பகம் சிக்கியுள்ளது.
விதிமீறல் ஏன்?
சில நாடுகளில் சமூக வலை தளங்கள், வாட்ஸ்ஆப் போன்றவற் றுக்கு தடை உள்ளது. அதனால் அந்நாடுகளைச் சேர்ந்தவர்கள் தொலைபேசி வழியாகவே தமிழகத் தில் இருக்கும் உறவினர், நண்பர் களிடம் பேசவேண்டி உள்ளது. சில நாடுகளில் இருந்து இந்தியா வுக்கு பேச அதிக கட்டணம் வசூ லிக்கப்படுகிறது. இந்த தொகையின் ஒரு பகுதியை இந்தியாவில் உள்ள தொலைபேசி சேவை நிறுவனங் களுக்கு, வெளிநாட்டு தொலைபேசி சேவை நிறுவனங்கள் வழங்கும். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை சட்டவிரோத இணைப்பகங்கள், உள்ளூர் அழைப்புகளாக மாற்றி வழங்கும் போது, வெளிநாட்டில் இருந்து பேசுவோருக்கு வழக்கமான கட்ட ணம் மட்டுமே செலவாகும். அந்த முழு தொகையும் இந்திய தொலைபேசி சேவை நிறுவனத் துக்கு வராது. அது சட்ட விரோத இணைப்பகங்களுக்கு சென்று விடும். உள்ளூர் அழைப்புகளை வழங்குவதற்கான சேவை கட்டணம் மட்டுமே இந்திய தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு கிடைக் கும்.
இவ்வாறு செய்யும்போது அதை மத்திய, மாநில அரசு புலனாய்வு முகமைகளால் இடைமறித்து கேட்க முடியாது. அதனால் இந்த அழைப்பின் மூலம் சமூக விரோதி கள் தகவல் பரிமாற்றம் செய்ய வாய்ப்புள்ளது. எனவே இந்த முறை, தேச பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகும்.
நவீன தொழில்நுட்பம்
இந்தியாவில் பல்வேறு இடங் களில் இதுபோன்ற சட்டவிரோத இணைப்பகங்கள் பிடிபடுகின்றன. தமிழகத்தில் அதிகபட்சமாக 250 சிம் கார்டுகளுடன்தான் இது போன்ற இணைப்பகங்கள் செயல் பட்டு வந்துள்ளன. இந்த முறை பிடிபட்டுள்ள இணைப்பகத்தில் 1500 சிம் கார்டுகள் பயன்படுத் தப்பட்டுள்ளன. இது இதுவரை இல்லாத அளவாகும். எப்படி இத் தனை சிம் கார்டுகள் வாங்கப் பட்டன என்பது குறித்து விரிவாக விசாரிக்கப்பட உள்ளது. இதில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிக ளுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டு கள் வரை சிறை தண்டனை கிடைக் கும். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர்களை கைது செய்வது குறித்தும் போலீஸாருடன் ஆலோசிக்கவுள்ளோம்.
இந்த நவீன கருவிகளை வாங் கும்போது, ஜிஎஸ்டி வரி, சுங்க வரி உள்ளிட்டவை செலுத்தப் பட்டுள்ளதா, இவர்களது வங்கிக் கணக்குக்கு வரும் வருமானம் தொடர்பாக முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளதா என சம்பந்தப்பட்ட துறைகள் விசாரிக்கவும் நடவ டிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பத்திரிகையாளர் சந்திப் பின்போது தொலைத்தொடர்புத் துறை துணை தலைமை இயக்குநர் (நிர்வாகம்) ஜி.கலைவாணி, இயக்குநர்கள் மு.சந்திரசேகர் (ஊரகம்) எம்.வர்கீஸ் மாத்யூ (பாதுகாப்பு), பிரகாஷ் தாங்கி ஆகியோர் உடனிருந்தனர்.