செய்திப்பிரிவு

Published : 24 Aug 2019 10:37 am

Updated : : 24 Aug 2019 10:37 am

 

மேலூர் அருகே விஷ பிஸ்கட் கொடுத்து குழந்தைகளை கொன்ற தாய் 2 ஆண்டுகளுக்குப் பின் கைது

mother-killed-children-arrested-after-2-years

மதுரை 

மதுரை மாவட்டம், மேலூர் அருகே விஷ பிஸ்கட் கொடுத்து 2 குழந்தைகளைக் கொலை செய்த தாயையும், அவரது ஆண் நண்பரையும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸார் கைதுசெய்தனர்.

மதுரை மாவட்டம், சருகு வலையபட்டியைச் சேர்ந்தவர் ராகவானந்தம் (30). இவரது மனைவி ரஞ்சிதா (27). இவர்களது மகன்கள் கிரிபாலன் (9), யுவராஜ்(5), மகள் பார்கவி (7). ராகவானந்தம் நீண்ட காலமாக வெளிநாட்டில் பணிபுரிந்தார். குழந் தைகளுடன் ரஞ்சிதா சொந்த ஊரில் வசித்து வந்தார்.

குழந்தைகள் உயிரிழப்பு

இந்நிலையில் 2016 அக்டோபர் 10-ம் தேதி வீட்டில் ரஞ்சிதா கொடுத்த பிஸ்கட்டை சாப்பிட்ட அவரது 3 குழந்தைகளும் மயங் கினர். பின்னர் சம்பவ இடத்தில் குழந்தைகள் பார்கவி, யுவராஜ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

மதுரை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட கிரிபாலன் மட்டும் பிழைத் துக் கொண்டார்.


இதற்கிடையில், வெளிநாட்டில் இருந்து ஊருக்குத் திரும்பிய ராகவானந்தனுக்கு தனது மகன், மகள் இறப்பில் சந்தேகம் எழுந்தது. உயிர் தப்பிய மகனிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டார்.

ரஞ்சிதாவும், அவரது தாயாரும் ஒரே நேரத்தில் பிஸ்கட் கொடுத்ததாகத் தெரிவித் ததால், ராகவானந்தனுக்கு சந்தேகம் அதி கரித்தது. இதையடுத்து, அவர் தனது மகள், மகன் இறப்பில் சந்தேகம் தெரிவித்து அப்போதைய எஸ்பி விஜேந்திர பிதாரியிடம் புகார் அளித்தார். இதுகுறித்து கீழவளவு போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில் சரிவர விசாரிக்காமல் கிடப்பில் போட்டனர். இதை யடுத்து இச்சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றக் கிளையில் ராக வானந்தம் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கில் நீதிமன்றத்தில் கிரிபாலனிடம் ரகசிய வாக்குமூலம் பெறப் பட்டது.

நீதிமன்ற உத்தரவின்பேரில் மீண்டும் சம்பவம் பற்றி போலீஸார் விசாரித்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், ரஞ்சிதா தனது ஆண் நண்பர் கல்யாணகுமார் என்பவருடன் சேர்ந்து, குழந்தைகளுக்கு எலி மருந்து தடவிய பிஸ்கட்களை கொடுத்துள்ளது தெரியவந்தது. இதனால்தான் இரு குழந்தைகள் மரணம் அடைந்தனர். கிரிபாலன் மட்டும் வெளியில் சென்று, பாதி பிஸ்கட்டை துப்பியதால் உயிர் பிழைத்தார்.

இருவர் கைது

இதையடுத்து, மேலூர் டிஎஸ்பி சுபாஷ் தலைமையிலான போலீஸார் ரஞ்சிதா, கல்யாணகுமாரை தேடியபோது அவர் கள் தலைமறைவாயினர்.

இந்நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பின் அவர்களை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

விஷ பிஸ்கட்குழந்தைகளை கொன்ற தாய்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author