

சென்னை
விருகம்பாக்கம் ஆற்காடு சாலை சிஎஸ்ஐ தேவாலயப் பகுதி யில் போலீஸார் நேற்று முன்தினம் இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வளசரவாக்கம் ஏழுமலைத் தெருவைச் சேர்ந்த அஜித்குமார், அவரது நண்பர் ராயலா நகரைச் சேர்ந்த வருண்ராஜ் ஆகியோரை மறித்து நிறுத்தினர்.
இதில் இருவரும் மதுபோதை யில் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இருவரையும் போலீஸார் தங்களது ரோந்து வாகனத்தில் ஏற்றினர். பின்னர் போலீஸார், தொடர்ந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப் போது, போலீஸாரின் வாகனத்தில் இருந்து இறங்கிய வருண்ராஜ் ‘‘அங்கிருந்த காவல்துறை வாக்கி டாக்கியை எடுத்து, தான் தவறே செய்யவில்லை என்றும், போலீ ஸார் என்னை கைது செய்துவிட் டார்கள்’’ என்றும் பேசியுள்ளார்.
இந்த பேச்சை சென்னை முழுவதும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் காவல்துறை அதிகாரிகளும் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். இந்தப் பேச்சை அங்கிருந்த போலீஸாரும் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து போலீஸார், வருணை எச்சரித்து, ராயலாநகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து வருண்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட் டது. அதேபோல மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக போக்கு வரத்துப் பிரிவு போலீஸாரும் வழக்கு பதிவு செய்தனர்.