9 ஆண்டாக குழந்தை இல்லாத ஏக்கத்தால் ஒடிசா மாநிலத்தில் தமிழக தம்பதி தற்கொலை
ஈரோடு
தமிழகத்தைச் சேர்ந்த ஜெய பாலன் (37), மாலவி கேசவன் (35) தம்பதியினர் ஒடிசா மாநிலம் ரூர் கேலாவில் வசித்து வந்தனர்.
ரூர்கேலாவில் உள்ள என்.ஐ.டி. கல்லூரியில் ஜெயபாலன் துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந் தார். கல்லூரி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் இருவரும் வசித்து வந்துள்ளனர்.
கடந்த 14-ம் தேதி முதல் தம்பதி யின் நடமாட்டத்தைக் காணாத தால், சந்தேகமடைந்த அருகில் வசிப்போர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். வீட்டின் கதவை உடைத்து போலீஸார் உள்ளே சென்று பார்த்தபோது, மாலவி கேசவனும், ஜெயபால னும் இறந்த நிலையில் கண்ட றியப்பட்டனர்.
இறப்பதற்கு முன்பாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 4 பக்க கடிதத்தை அவர்கள் எழுதி வைத்து உள்ளனர். இருவரது உறவினர்களுக்கும் தகவல் அளித் துள்ள போலீஸார், உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
தம்பதி மரணம் குறித்து ரூர் கேலா எஸ்பி சர்தாக் சாரங்கி கூறும் போது, ‘‘அடிப்படை ஆதாரங்க ளைப் பார்க்கும்போது இருவரும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கருதுகிறோம். ஆனால், அதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவர வில்லை. இந்த சம்பவம் தொடர் பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.
என்.ஐ.டி. கல்லூரி பதிவாளர் பி.கே.தாஸ் கூறும்போது, ‘‘தம்பதி இருவரும் மிகுந்த அன்போடும், நட்போடும் வாழ்ந்து வந்தனர். அனைத்துத் துறைகளிலும் ஜெய பாலன் ஈடுபாட்டுடன் பணிபுரிந்த தால், மாணவர்கள் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்து இருந்தனர்’’ என்றார்.
ஜெயபாலன் - மாலவி கேசவன் தம்பதிக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகளாகியும் குழந்தை இல் லாததால் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள் ளது.
