Last Updated : 16 Aug, 2019 03:28 PM

 

Published : 16 Aug 2019 03:28 PM
Last Updated : 16 Aug 2019 03:28 PM

நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு விசாரணை அதிகாரி மாற்றம்

திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், அவர்களது வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி படுகொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக, தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி, திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் என்பவரின் மகன் கார்த்திகேயன் என்ற கார்த்திக் ராஜாவை கைது செய்தனர்.

பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார் மேற்பார்வையில், டிஎஸ்பி அனில்குமார், ஆய்வாளர் பிறைச்சந்திரன் குழுவினர் விசாரணை நடத்தினர். சிறையில் அடைக்கப்பட்ட கார்த்திக்ராஜாவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி, மீண்டும் சிறையில் அடைத்தனர். இதில், பல்வேறு தகவல்களை கார்த்திக்ராஜா கூறியுள்ளார். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி சிபிசிஐடி அனில்குமார் திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சிபிசிஐடி ஓசியு பிரிவுக்கு உதவி ஆணையராக பிராங்க்ளின் ரூபன் நியமிக்கப்பட்டார். அவர், 14-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னாள் மேயர் உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை அவர் ஆய்வு செய்து வருகிறார்.

கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x